22nd October 2021 14:02:01 Hours
கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (22) காலை ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் படி நிலவும் மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 31 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதாக அறிவித்தார்.
அதனையடுத்து இன்று காலை நடந்த ஜனாதிபதி பணிக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி, சுகாதாரத் துறை, முப்படைகள், பொலிஸார், சுற்றுலாத் துறையில் உள்ள அனைத்து முன்னணி பணியாளர்களுக்கும் 2021 நவம்பர் 1 ம் திகதிக்கு பின்னர் ஃபைசர் தடுப்பூசியை பூஸ்டர் மாத்திரையாக வழங்கப்படவுள்ளது.