Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd October 2021 15:00:19 Hours

இலங்கை இராணுவ சமிஞ்சைப் படையணி மத மற்றும் இராணுவ முறைகளுடன் 78 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

78 வது படையணியின் தினத்தை பனாகொடை “ஹோம் ஆஃப் சிக்னல்” படையணி தலைமையகத்தில் அக்டோபர் 15 - 19 ஆகிய திகதிகளில் பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடியது. இலங்கை சமிஞ்சை படையணியின் படைத் தளபதியும் தலைமை சமிஞ்சை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் (எஸ்எல்எஸ்சி) மற்றும் பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரிகள் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் லலித் ஹேரத், நிலையத் தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகா உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

பௌத்த ,கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாமிய மத அனுஸ்டானங்களை தொடர்ந்து உயிர் நீத்த இலங்கை சமிஞசைப் படையினர் நினைவு கூரல் நிகழ்வு இடம் பெற்றது. ஆண்டுவிழாவின் ஒரு பகுதியாக 17 பௌத்த துறவிகளின் பங்கேற்பில் இரவு முழுவதுமான ‘பிரீத்’ பாராயணம் படையணி தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது. இதன் போது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் இலங்கை சமிஞ்சை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஜீவனி பீரிஸ், சீரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் பாரியார்கள் மற்றும் சிப்பாய்கள் இரவி முழுதுமான நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மறுநாள் காலை (16), மஹா சங்க உறுப்பினர்களுக்கு ‘ஹீல் தானா’ (காலை உணவு) வழங்குவதுடன் மத விழாக்கள் நிறைவடைந்தது.

ஆண்டுவிழாவின் முக்கியகட்ட நிகழ்வாக அக்டோபர் (19)அன்றைய தலைமை விருந்தினரான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து பிரதம விருந்தினரை படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகா வரவேற்றார். பின்னர் இலங்கை சமிஞ்சை படையணியின் அனைத்து பதினொரு படை அலகுகளின் பிரதிநிதிகள் அடங்கிய வண்ணமயமான மற்றும் நேர்த்தியான அணிவகுப்பு மரியாதை பிரதம விருந்தினர் மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதன் பிறகு பிரதம அதிதி இலங்கை சமிஞ்சை படையணி வளாகத்தில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டதன் பின்னர் ஆண்டு விழாவினையொட்டி அங்கு கூடியிருந்த சமிஞ்சை அதிகாரிகளிக்கு உரையாற்றினார். மதிய விருந்துபசாரத்தின் போது சீரேஸ்ட அதிகாரிகயினால் கடந்த இரண்டு வருடங்களில் 2020 மற்றும் 2021 விளையாட்டு நிகழ்வுகளில் சாதனை படைத்த இலங்கை சமிஞ்சை படை அலகுகளுக்கு கேடயங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கினர்.

இறுதிப் நிகழ்வில் பிரதம அதிதி உரையாற்றுகையில் அர்ப்பணிப்புடன் இலங்கை சமிஞ்சைப் படையணிக்கு சேவை செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இறுதி நிகழ்வில் பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரிகள் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் லலித் ஹேரத், மத்திய பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொது பணி, நிலையத் தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள், ரெஜிமென்ட் சார்ஜென்ட் மேஜர்கள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.

இலங்கை சமிஞ்சை படையணி 19 அக்டோபர் 1943 அன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் வரலாறு முதல் உலகப் போரின் சகாப்தத்திற்கு முந்தையது. அதன் தொடக்கத்திலிருந்து, இராணுவத்தின் தகவல் தொடர்புத் துறையில் குறிப்பாக மனிதாபிமான நடவடிக்கைகள் முடிவடையும் வரை மற்றும் தேசத்தின் நலன்களுக்காக இராணுவ நடவடிக்கைகளின் போது இலங்கை சமிஞ்சை படையணி முக்கிய பங்கு வகித்தது. இலங்கை சமிஞ்சை படையணி “ விரைவானது மற்றும் நிச்சயமானது” எனும் குறிக்கோளுடன், நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைச் சேர்த்து முழு கட்டமைப்பை தகவல்தொடர்பு உள்ளடக்கிய வகையில் தேசத்திற்கு சேவை செய்துள்ளது.

கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கொவிட் -19 தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கு அதன் ஆதரவை விரிவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரவுத்தள வலையமைப்புதுறையின் முக்கிய பங்கு அளித்தது இலங்கை சமிஞ்சை படையணி. இன்று, இலங்கை இராணுவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மற்றும் பல பரிமாண அச்சுறுத்தல் சூழலில் செயல்படுவதற்கும் நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள இலங்கை சமிஞ்சைப் படையணி தயாராக உள்ளது.