Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2021 09:00:34 Hours

யாழ்லில் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் மேலும் மூன்று வீடுகள் நிர்மாணிப்பு

இராணுவ தினத்தை முன்னிட்டு யாழ்.சங்குவேலி மற்றும் சந்திராபுரம் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் இரண்டு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான சமூக சார் வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (8) ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், இந் நிகழ்வின் போது நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்த இரண்டு சிறப்பு மிக்க விழாக்களும் 511 வது மற்றும் 523 வது பிரிகேட் படையினர் 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல மற்றும் 52 வது படைபிரிவு தளபதி பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டன. 'ஸ்ரீ சத்ய சாய்' சர்வதேச அமைப்பு மற்றும் 'தியாகி அறக்கட்டளை' தலைவர் திரு. தியாகேந்திரன் ஆகியோர் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இத்திட்டத்தினை மேற்கொள்ள நிதியுதவி வழங்குகின்றனர்.

511 வது மற்றும் 523 வது பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் 9 வது இலங்கை இலேசாயுத காலாட்படை மற்றும் 4 வது விஜயபாகு காலாட்படை கட்டுமான பணிக்கு தேவையான மனிதவளத்தையும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்குகின்றனர். அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளின் முடிவில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி பிரதேசத்தின் ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கினார்.

55 வது படைப்பிரிவின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் விழாக்களில் கலந்துகொண்டனர். இதற்கிடையில், யாழ்.மருதங்கேணியில் வசிக்கும் ஏழை குடும்பத்தில் வசிக்கும் திருமதி எஸ்.மதிருபன் என்பவருக்கான மற்றொரு புதிய வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டல் 18 ஒக்டோபர் 2021 அன்று நடைபெற்றது.

55 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜெயவர்த்தன இந்த விழாவில் பிரதான அதிதியாக கலந்து கொண்டார். 10 வது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் சிப்பாய்கள் கட்டுமான பணிக்கான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கினார்கள், திரு. குமார வீரசூரிய என்பவரினால் இந்த வீடு கட்டுமானத்திற்கான மூலப்பொருட்களை வாங்குவதற்கு நிதி பங்களிப்பை வழங்கினார். இத்திட்டமானது 553 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரதேச உதவி செயலாளர் திரு பி தயாரத்தினம், கட்டளைக்குட்பட்ட பபடை அலகுகளின் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் சிப்பாய்களும் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டனர்.