Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd October 2021 12:00:29 Hours

ரோட்டரி கழக அணுசரனையில் படையினர் உலர் உணவு பொதிகள் விநியோகம்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக ஏற்பாட்டில் கொழும்பு ரோட்டரி கழகத்தின் திரு சுபெம் டி சில்வா அவர்களின் அனுசரனையில் தலா 7500.00 பெறுமதியான 100 உலர் உணவு பொதிகள் ஞாயிற்றுக்கிழமை (17) பொலன்னறுவை மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய வழிகாட்டுதல்களின் பேரில் 23 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த அவர்களினால் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே அவர்களின் மேற்பார்வையில் 7 வது பீரங்கிப் படையணி மற்றும் 9 வது கள பீரங்கி படையணி இந்த விநியோக திட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

கொவிட் 19 தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்ட வெளிகந்த , திம்புலாகல மற்றும் மெதிரிகிரிய பகுதிகளில் வாழும் ஏழை குடும்பங்களுக்கு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 23 வது படைப்பிரிவு தளபதி நளின் கொஸ்வத்த , 231 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே , 23 வது படைப்பிரிவு சிவில் விவகார அதிகாரி, அதிகாரிகள் மற்றும் 7 மற்றும் 9 வது பீரங்கி படையின் சி்பாய்களும் இத்திட்டத்தில் பங்கேற்றனர்.