Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd October 2021 14:00:29 Hours

பதவி உயர்வு பெற்ற முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதிக்கு மரியாதை

முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் அவர்கள் புதிய நிலை உயர்விற்கான சின்னத்தை இராணுவத் தளபதியிடம் பெற்றுக் கொண்டமையினையடுத்து திங்கட்கிழமை 18ம் திகதி அவரை வாழ்த்தும் முகமாக சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவப் பொலிஸ் படையினரால் நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கி முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டார். இந்த விழா இராணுவ மரியாதைக்குப் பிறகு அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துடன் முடிவடைந்தது. இந்த விழாவில் கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.