Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2021 10:00:28 Hours

53வது படைப்பிரிவு ஓய்விற்கான புதிய கட்டிடம் திறப்பு

கிளிநொச்சியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவின் தலைமையகத்தின் கீழ் தம்புள்ளை இனமலுவ 53 வது படைபிரிவு தலைமையகத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கான ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்காக புதிதாக அமைக்கப்பட்ட 'ஸ்ட்ரைக்கர்ஸ் பே' கட்டிடம் பிற்பகல் (21) பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

முதலாவது சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க மற்றும் 53 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே ஆகியோர் இணைந்து வருகைதந்த இராணுவ தளபதியை வரவேற்றனர்.

53 வது படைப்பிரிவு ஜெனரல் நிஷாந்த மானகே வரவேற்புரை வழங்கினார், இதன் போது இராணுவத்தின் தற்போதைய தளபதி பல ஆண்டுகளுக்கு முன்பு 22 வது தளபதியாக பணியாற்றியமையை நினைவுபடுத்தினார். இந்த புதிய கட்டிடம் பொலன்னறுவை அல்லது அனுராதபுரத்திற்குச் செல்லும் இராணுவக் குடும்ப உறுப்பினர்களுக்கு தங்குவதற்காக இக்கட்டிடத்தை பயன்படுத்த முடியும் என அவர் கூறினார்.

அதன் பின்னர் அன்றைய பிரதம விருந்தினர் ஒரு நினைவு பலகையை திரை நீக்கம் செய்து இராணுவ வீரர்கள் ஓய்வு நேரத்தில் ஓய்வெடுக்கவும், ஹபரண வனப்பகுதியை ஒட்டிய' கீனகஹவேவவின் இயற்கை அழகை ரசிக்க கூடியதுமான புதிய 'ஸ்ட்ரைக்கர்ஸ் பே கட்டிடத்தை திறந்துவைத்தார். பின்னர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய இடத்தை பார்வையிட்டதன் பின்னர் 53வது படைப்பிரிவின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுக்களை பதிவிட்டார். அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு முன்பதாக மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் இராணுவத் தளபதிக்கு சிறப்பு நினைவுப் பரிசு வழங்கினார்.