Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2021 16:00:18 Hours

கெமுனு ஹேவா படையணியின் தளபதிக்கு பிரியாவிடை நிகழ்வு

Aஇலங்கை இராணுவத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலான சேவையினை நிறைவு செய்ய்யது ஓய்வுபெற்றுச் செல்லும் இலங்கை இராணுவ தொண்டர் படையின் 46 வது தளபதியும் இராணுவ பயிற்சி கட்டளை தளபதியும் மற்றும் கெமுனு ஹேவா படையணியின் 19 வது படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சேனா வடுகே அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு 05 ஒக்டோபர் 2021 அன்று கெமுனு ஹேவா படையணி மையத்தில் நடைபெற்றது.

Aஅங்கு வருகை தந்த தளபதியினை இராணுவ சம்பிரதாயங்களின் பிராரம் இராணுவ கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜே.எம்.ஆர்.என்.கே. ஜெயமன்ன வரவேற்றதுடன் அவருக்கு நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கை மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதை ஆகியன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அவர் உயிர்நீத்த போர்வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்.

Aபடையணி மையத்தின் அனைத்து அதிகாரிகளும் மற்றும் சிப்பாய்களும் கெமுனு ஹேவா படையணிக்காக அர்ப்பணிப்பு சேவைகளை மேற்கொண்ட வெளிச்செல்லும் சிரேஷ்ட அதிகாரிக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் அவர் ஆரோக்கியமாக வாழவும், அமைதியான மற்றும் வளமான ஓய்வு பெறவும் வாழ்த்தினர்.

A1966 ஒக்டோபர் 06 ஆம் திகதி பிறந்த மேஜர் ஜெனரல் சேனா அவர்கள் ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம மகா வித்தியாலயத்தில் பெருமைக்குரிய மாணவராக திகழ்ந்தார் . அவர் கொத்தலாவை பாதுகாப்பு கல்லூரியில் ஆட்சேர்ப்பு பாடநெறி - 4 இல் இணைந்து இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார் மற்றும் 1988 இல் ஆணைபெற்ற அதிகாரியாக நியமிக்கப்பட்டார், பின்னர் அவர் 5 வது பட்டாலியனில் கெமுனு ஹேவா படையணியில் நியமிக்கப்பட்டார்.

Aமேஜர் ஜெனரல் சேனா வடுகே தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு படிப்புகளை தொடர்ந்தார், அதாவது: இளம் அதிகாரிகள் படிப்பு - பாகிஸ்தான், ஜூனியர் கட்டளை பாடநெறி- இந்தியா, பிரிவு நிருவாக பாடநெறி , கட்டளை மற்றும் பதவி நிலை பாடநெறி- இராணுவ கட்டளை & பதவி நிலை கல்லூரி இலங்கை, பரசூட் பாடநெறி- இந்தியா, பாதுகாப்பு இணைப்பு அதிகாரி அறிமுக பாடநெறி, சிரேஷ்ட கட்டளை பாடநெறி- இந்தியா, மேம்பட்ட பாதுகாப்பு கூட்டுறவு திட்டம் - ஹவாய், இராணுவ விஞ்ஞான தந்திரோபாய முதுநிலை பாடநெறி - சீனா, மனித வள மேலாண்மை பட்டம் - கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ராஜதந்திரம் மற்றும் சர்வதேச உறவுக்கான பாடநெறி ஆகிய பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

Aமேஜர் ஜெனரல் சேனா வடுகே தனது திறமையால் இராணுவத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியிருந்தார், மேலும் அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பல கட்டளை, பணியாளர்கள் மற்றும் அறிவுறுத்தல் நியமனங்களை வைத்திருப்பதன் மூலம் தன்னை சிறப்பான ஒரு சின்னமாக நிரூபித்தார். அவைகளில் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் நிறைவேற்று அதிகாரி, தியத்தலாவை இலங்கை இராணுவ கல்லூரியில் மூத்த பயிற்றுவிப்பாளர், 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி , 513, 684, 232 மற்றும் 234 வது காலாட்படை பிரிகேட் தளபதி அம்பாரை போர் பயிற்சி பாடசாலையின் தளபதி , உதவி இராணுவ செயலாளர், இராணுவத் தலைமையகம், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி அதிகாரி, 52வது காலாட்படைப் பிரிவு தளபதி, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், இயந்திரவியல் காலாட்படையணியின் தளபதி மற்றும் இறுதியாக அவர் கெமுனு ஹேவா படையணியின் 19 வது தளபதியாக சேவையாற்றியதுடன் இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் தளபதி மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையின் 46 வது தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

Aமேஜர் ஜெனரல் சேனா வடுகே இராணுவத்தில் நேர்மையான மற்றும் சிறந்த நடத்தை கொண்டவர் என பெயர்பெற்றதுடன் அவர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றார் மற்றும் போர்களில் வீரமும் கொண்ட தனிநபர் செயல்களுக்காக வழங்கப்பட்ட ராணா விக்கிரம பதக்கமா போன்ற வீர மற்றும் சேவை அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டார் மற்றும் சிறப்பான துணிச்சலின் செயல்களுக்காக ரானா சூர பதக்கமும் வழங்கப்பட்டது.