Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2021 15:30:18 Hours

இடைநிலை பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் வரிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 100 உலர் உணவுப் பொதிகள்

613 வது பிரிகேட் படையினர் கம்புருப்பிட்டியில் உள்ள வரிய குடும்பங்கள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சனிக்கிழமை (16) 100 உலர் உணவுப்பொதிகளை வழங்கினர்.

இந்த நிகழ்வானது 61 வது படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹெவகே மற்றும் பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் கீழ், 14 வது (தொண்) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது இதற்கான நன்கொடையானது “Blissful Minds” என்ற அமைப்பினால் வழங்கப்பட்டது.

அதன்படி, எல்பிட்டிய இகல் கந்த இடைநிலை பராமரிப்பு மையம், ருஹுனு தேசியக் கல்லூரி அக்மீமனா இடைநிலை பராமரிப்பு மையம், கம்புருபிட்டிய கிராம மற்றும் இராணுவத்தில் உள்ள சிவில் ஊழியர்களுக்கும் ரூ .6000 மதிப்புள்ள ஒவ்வொரு பொதிகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.