Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2021 18:00:18 Hours

68 & 64 வது படைப்பிரிவுத் தலைமையகங்களினால் ஆண்டுவிழா திட்டங்கள் முன்னெடுப்பு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 681 பிரிகேட் படையினர், இராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஒக்டோபர். 10 ஆம் திகதி முல்லைத்தீவு பகுதியில், பொதுமக்களுக்கான நலத்திட்டங்களைத் தொடங்கினர். இந்த திட்டமானது 68 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டாரவின் அறிவுறுத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி 6 வது பட்டாலியன் கெமுனு ஹேவா படையணியினால் தேரவில், வள்ளுவபுரம், வள்ளிபுனம் மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தில் முல்லைத்தீவு பகுதியில் மொத்தம் 25 தகுதியான குடும்பங்கள் இந்த உலர் உணவு பொதிகளை பெற்றன, அதில் அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும்.

681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நளின் ஹெட்டியாராச்சி, 6 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்.எம்.ஆர். ஹென்னாயக், மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதற்கிடையில், முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 641 வது பிரிகேட் படையினர் (அக்டோபர் 10) இராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவை முன்னிட்டு முல்லைத்தீவு பகுதியில் 64 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சமூக நலத் திட்டங்களைத் தொடங்கினர்.

அதன்படி, 641 வது பிரிகேட் படையினர் மொனரவெவ விகாரை பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கியதுடன் 14 வது இலங்கை சிங்க படையணியின் சிப்பாய்கள் மூலமுறிப்பில் உள்ள தேவாலயத்தை சுத்தம் செய்தனர். அதே சமயத்தில், 64 வது படைப்பிரிவு முகாமுக்குள் மரக்கன்றுகள் நட்டப்பட்டதுடன் பொதுமக்களுக்கு மொத்தம் 1104 மரக்கன்றுகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

641 வது பிரிகேட் தளபதி , 14 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.