Header

Sri Lanka Army

Defender of the Nation

17th October 2021 09:18:59 Hours

11 வது கெமுனு ஹேவா படையணியினரால் நெடுங்கேனியில் மற்றுமொரு குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு

இராணுவ தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10), வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 62 வது படைப் பிரிவின் கீழ் பணியாற்றும் 623 வது பிரிகேட்டின் 11 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் நெடுங்கேணியில் வசிக்கும் வறிய குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஞாயிற்றுக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது.

62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர அவர்களின் வேண்டுகோளின் பேரில், கண்டியில் உள்ள ‘டோவெல்ஸ்’ மருத்துவர்கள் நலச் சங்கத்தின் தலைவர், தொழில் முனைவோர் திரு நலிந்த திஸாநாயக்க, வெஹெரதென்ன மெட்டல் கிரஷர்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் திரு. திலீப் ஜெயக்கொடி, கெப்டன் லக்‌ஷ்மன்(ஓய்வு) திரு ரன்ஜுல, 11 வது கெமுனு ஹேவா படையணியின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த வீட்டின் நிர்மாணத்திற்கான நிதியுதவி வழங்கியதோடு இந்த திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

வன்னியின் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் மற்றொரு சமூகத் திட்டமாக நெடுங்கேணி, மருதோடையில் உள்ள திருமதி பி விஜேந்திரனி என்பவருக்கு நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீட்டுத் திட்டமானது, 62 வது படைப்பிரிவுத் தளபதி மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 623 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹான் மெதகொட ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமைவாக, 11 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் பிரசாத் கருணாரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது

வீடு கையளிக்கும் நிகழ்ச்சியில் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் , நெடுங்கேணி பிராந்திய வன பாதுகாப்பு அதிகாரி, நெடுங்கேணி, மாகா திட்ட பொறியியளாளர், நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி , புளியங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பல சமூகத் தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த விழாவின் போது, 62 வது படைப் பிரிவின் தளபதி வளாகத்தில் சில மரக்கன்றுகளை நட்டதுடன் தளபாடங்கள் உட்பட பல வீட்டுப் பொருட்களையும் பயனாளிக்கு பரிசளித்தார்.