Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2021 14:30:38 Hours

இராணுவத் தளபதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் உள்ள விவசாய சங்கத்திற்கு ஒத்துழைப்பை தருவதாக உறுதி அளித்தார்

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஞாயிற்றுக் கிழமை (17) கிளிநொச்சி மாவட்டத்திற்கான தனது விஜயத்தின் போது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல விவசாய சங்கங்களின் பிரதிநிதி குழுவினர் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் இராணுவத் தளபதியை சந்தித்தனர்.

அந்த நிறுவனங்களின் தலைவர்கள்/செயலாளர்கள் உட்பட அந்த விவசாய பிரதிநிதிகள் சேதன பசளையினை பயன்படுத்துவது தொடர்பான விடயங்களைப் பற்றி கலந்துரையாடியதுடன் மற்றும் சேதன பசளை பாவனையானது இன்னும் விவசாய நிலங்களுக்கு உகந்ததாக காணப்படவில்லை என்பதனால் சேதன பசளை மற்றும் இரசாயன பசளை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

வருகை தந்த இராணுவத் தளபதியிடம் சேதன பசளை பயன்பாடு மனிதனின் சுகாதார வாழ்விற்கு பெரிதும் நன்மை ஏற்படும் என்பதனால் இது சிறந்த தெரிவு என்பதனை எடுத்துக்காட்டிய அவர்கள் தமது தேவைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். மற்றும் கவனிக்கப்படாத அரசு நிலங்களை விவசாயத்திற்காக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குமாறும் இராணுவத் தளபதியுடம் கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் கருத்துக்களுக்கு பொறுமையாக செவிமடுத்த இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், சேதன பசளை கொள்கையை அமுல்படுத்துவதில் ஜனாதிபதியின் பார்வை மற்றும் அந்த முறைகளை பிரபலப்படுத்துவதற்கான நகர்வுகளை விளக்கினார்.

அவர்களின் விவசாய திட்டங்களுக்கு இராணுவ ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி செய்த தளபதி விவசாய நோக்கங்களுக்காக அரச நிலங்களை குத்தகைக்கு அல்லது அந்தந்த மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு வேறு சில ஒப்பந்தங்கள் மூலம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக உறுதியளித்தார்.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அந்த விவசாய பிரதிநிதிகளிடம் கிளிநொச்சி 1வது படையணி மற்றும் முல்லைத்தீவு தளபதிகளை ஒவ்வொரு மாதமும் நேரடியாக தொடர்பு கொள்ள வெண்டுகோள் விடுத்ததுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இதுபோன்ற தேவைகளை கொண்டுவருவதற்காக நிலுவையில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக்கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.

அந்த பிரதிநிதி விவசாயிகளுக்கு தங்கள் கேள்விகளையும் மற்றும் பிரச்சினைகளையும் அந்த இடத்திலேயே தெரிவிக்க சந்தர்பம் அளிக்கப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள 1 வது படையணித் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய மற்றும் சிரஷ்ட அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்கு கொண்டனர்.