Header

Sri Lanka Army

Defender of the Nation

17th October 2021 09:45:10 Hours

66 வது படைப் பிரிவினால் பதவியுயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவ மரியாதை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 66 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் அணமையில் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டதனை முன்னிட்டு, அப்பதவியுயர்வினை கௌரவிக்கும் முகமாக வியாழக்கிழமை (14) திகதி பூனெரின் பிரதேசத்தில் அமைந்துள்ள 66 வது படைப்பிரிவு தலைமையகத்தில் வைத்து அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

அங்கு வருகையினை மேற்கொண்ட அவருக்கு , 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் அவர் இந்நிகழ்வின் அடையாளமாக படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, தேநீர் விருந்துபசார ஏற்பாட்டுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

குறித்த நிகழ்வின் போது 66 வது படைப்பிரிவின் கீழ் இயங்கும் அனைத்து பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்