Header

Sri Lanka Army

Defender of the Nation

15th October 2021 14:00:36 Hours

எத்தவெட்டுனுவெவ பகுதியிலுள்ள குடும்பமொன்றிற்கான வீட்டு நிர்மாண பணிகளுக்கு பௌத்த அமைப்புடன் இணைந்து படையினரும் உதவி

62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர அவர்களின் வழிகாட்டல் மற்றும் 621 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கீர்த்தி பெராகும் அவர்களின் மேற்பார்வையின் கீழ் , இராணுவத்தின் 72 வது தினத்தை முன்னிட்டு 14 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களால் ஏழைக் குடும்பமொன்றுக்கு புதிய வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டது. இதற்கான அனுசரணையானது வவுனியா வைத்தியசாலையிலுள்ள சதஹம்சுவ பௌத்த சங்கத்தினால் வழங்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணவக அவர்களினால் மேற்படி சமூக நலத்திட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜினேஸ் லியானகமகே அவர்களின் கண்காணிப்பின் கீழ், இல 04 வெலிஓயா, எத்தவெடுனுவெவ பகுதியில் வசிக்கும் திரு. சி.ஆர்.பிரியதர்ஷன அவர்களின் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு இந்த இராணுவ தினத்தன்று ஒக்டோபர் (10). பயனாளியிடம் வழங்கப்பட்டது. குறித்த பிரதேச சமூக ஆர்வலர்களினால் இந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை படையினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தையடுத்தே இந்த திட்டமானது முன்னெடுக்க்கப்பட்டது.

621 வது பிரிகேட் சிப்பாய்கள் தங்களது தொழில்நுட்ப மற்றும் கட்டுமான உதவிகளை இத்திட்டத்திற்கு இலவசமாக வழங்கியிருந்தோடு, பௌத்த சங்கத்தின் பிரதிநிதிகள், 62 வது படைப்பிரின் தளபதி, 621 வது பிரிகேட் தளபதி, 14 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரி உட்பட நலன் விரும்பிகள் சிலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.