14th October 2021 16:20:45 Hours
இராணுவத்தின் 72 வது ஆண்டு விழா நிகழ்வுகளை முன்னிட்டு, 10 ஒக்டோபர் 2021 அன்று மட்டக்களப்பிலுள்ள 160 வறிய குடும்பங்களுக்கு 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த அவர்களின் வழிகாட்டலின் கீழ் மற்றும் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.ஜே.என்.கே.டி பண்டார அவர்களின் மேற்பார்வையில் 6000.00ரூபாய் பெறுமதியான 100 நிராவரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
கொழும்பு மாவட்ட ரோட்டரி கழகத்தின் திரு சூபரீம் டி சில்வா அவர்களின் நிதி உதவியுடன். கொவிட் - 19 தொற்று நோயாள் பாதிக்கப்பட்ட உன்னச்சை மற்றும் கொக்கடிச்சோலை பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு மேற்படி நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த, 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் துளீப பண்டார, 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, 11 வது இலங்கை சிங்கப்படையணியின் கட்டளை அதிகாரி,23 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி, 231 வது பிரிகேட், 4 வது கெமுனு ஹேவா படையினர் மற்றும் 11 இலங்கை சிங்கப்படையணியின் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.