Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2021 16:40:45 Hours

யாழ். தலைமையகத்தின் கட்டளை அலகுகளில் ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வு

இராணுவத்தின் 72 வது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வை முன்னிட்டு யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் 51, 52 மற்றும் 55 படைப்பிரிவுகளின் சிப்பாய்களால் 2021 ஒக்டோபர் 9-10 ஆம் திகதிகளில் சிவில் இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய 551 வது பிரிகேடின் கீழுள்ள 4 வது இலங்கை சிங்கப்படையணி சிப்பாள்களால் நெல்லையிலுள்ள ஸ்ரீ பரமானந்தா சிறுவர் மற்றும் முதியவர்கள் பராமரிப்பு இலத்தில் உள்ளோருக்கான புத்தாடைகள் மற்றும் நிவானர பொதிகள், பாடசாலை சீறுடை பொருட்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன. இத்திட்டத்திற்கான 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ஜயவர்தன அவர்களினால் முழுமையாக நிதி உதவி வழங்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

அதேவேளையில் 551 வது பிரிகேட் மற்றும் 16 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் மாந்திகை வைத்தியசாலை வளாகம் முழுவதிலும் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது வைத்தியசாலை வளாகத்திற்குள் காணப்படும் கட்டிடங்களுக்கு படையினரால் பூச்சு பூசி மெருகூட்டியதோடு பிணவறை மற்றும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பயணிக்கும் வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் சகலருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே. ஜயவர்தன மற்றும் 551 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக விக்ரமசிங்க ஆகியோரின் பங்குபற்றுதலில் முன்னெடுக்கப்பட்டன. அதேபோல் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள செல்வசநிதி முருகன் கோவில் மற்றும் மிருசுவில் ஸ்ரீ அம்மன் கோவில் வளாகங்களில் 52 வது படைப்பிரிவை சேர்ந்த 11 விஜயபாகு காலாட்படை சிப்பாய்களால் நெரிசலான பகுதிகளில் காணப்பட்ட குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டம் 52 படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது.

அதேபோல் மேற்படி அனைத்து திட்டங்களும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.