Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2021 17:00:45 Hours

இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு 54 வது படைப்பிரிவினால் ஒரு வரிய குடும்பத்திற்கு வீடு பரிசளிப்பு

இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 54 வது பிரிவின் கீழ் உள்ள 542 வது பிரிகேட்டின் 8 வது விஜயபாகு காலாட்படையணி மற்றும் 10 வது (தொண்) கெமுனு ஹேவா படையணிகளின் சிப்பாய்களால் மன்னார் சிலாவத்துறை பகுதியிலுள்ள வறிய குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு திங்கள்கிழமை (11) திரு சுரேஷ் குமார் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகரவின் அவர்களின் பணிப்புக்கமைய 542 வது பிரிகேட் தளபதியர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் நன்கொடையாளரின் நிதி உதவியோடு வீட்டின் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி வீட்டை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான நிகழ்வானது முசலி பிரதேச செயலாளர் திரு. எஸ். ராஜீவ், 54 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர, 542 வது பிரிகேட் தளபதி, 8 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

அதே சமயத்தில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டிருக்கும் சிவில் சமூகத்திற்கு கரம்கொடுக்கும் நோக்கில் பெருந்தொகை தென்னங் கன்றுகள் மற்றும் மர முந்திரிகை கன்றுகள் என்பனவும் பகிர்ந்தளிக்கப்பட்டன.