Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2021 17:22:45 Hours

கஜபா படையணி அதன் 38 வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 14 ஆம் திகதி கஜபா படைப்பிரிவின் மறக்கமுடியாத படையனியின் நாள் என்பதால் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சேவை செய்யும் ‘கெட்டீரியன்ஸ்’ குடும்பத்திற்கு வலுவான அன்பின் உணர்வைத் தருகின்றது. உண்மையில் இராணுவத்தின் 25 படையணிகளின் தினமானது நாட்டின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரம்மாண்டமான இராணுவ ஸ்தாபனத்திற்கு சேவை செய்யும் ஒரு குடும்பமாக ஒருவருக்கொருவர் புத்துணர்ச்சியூட்டும் நினைவுகளையும் இணைப்புகளையும் தருகின்றது.

கஜபா படையணியானது 38 வருடங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு நாளில் (14) பிறப்பெடுத்தது. இது அவர்களின் ஒப்பற்ற தியாகங்கள், மற்றும் வெற்றிகள் என்பவற்றை உயரிய வகையில் கொண்டாடும் ஆண்டு நிறைவு விழாவாகும். இந்தப் படையணியானது மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களால் 14 ஒக்டோபர் 1983 அன்று ரஜரட்ட ரைபிள்ஸ் பட்டாலியன் மற்றும் 1 வது விஜயபா காலாட்படை என்பவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. பிரிவினைவாத குழுக்களால் சிவில் மற்றும் இராணுவக் கட்டமைப்புக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட உக்கிரமான தாக்குதல்களை எதிர்கொள்ளும் நோக்கில் கஜபா படையணி அதன் முதலாவது கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் விஜய விமலரத்ன அவர்களால் “ஒற்றுமையே வலிமை” என்ற கொள்கையுடன் உருவாக்கப்பட்டது. மேலும் கஜபா என்ற பெயர் யானைப் பலம் கொண்டவர் என புகழ்பெற்ற கஜபாகு மன்னனின் பெயரால் உருவாக்கப்பட்டதோடு அவரது தனித்துவமான போர் உக்திகள், திறன்கள் என்பவற்றை ஆதாரமாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தப் படைக்கான தளமொன்றை கட்டமைப்பது அவசியமாக காணப்பட்டது.

அதன்படி 1 வது கஜபா படையணியிக்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கும் நோக்கில் அதன் இரண்டாம் கட்டளை அதிகாரியான மேஜர் கோட்டாபய ராஜபக்ச அவர்களால் சாலியபுர என்ற இடம் தெரிவு செய்யப்பட்டது. அதுவரையில் முதலாவது கஜபா படையணியினர் யாழ். தீபகற்பம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிட்டமை.

கஜாபா படையணியானது இணையற்ற போர் திறன்களை கொண்ட படையணியாக மாத்திரமின்றி தாய்நாட்டிற்கு ஜனாதிபதி ஒருவரை வழங்கிய பெருமையோடு இரண்டு பாதுகாப்பு செயலாளர்கள் மற்றும் இராணுவ தளபதியொருவரை உருவாக்கிய சிறப்பையும் கொண்டுள்ளது. அதற்கமைய சாலியபுராவில் இராணுவ தினத்தன்று (ஒக்டோபர் 10) இடம்பெற்ற ஆண்டுபூர்த்தி விழாவை முன்னிட்டு நிகழ்வுகளின் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்(ஓய்வு) கமால் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகிய மூன்று வீரர்களும் தங்களை ஒழுக்கமான பயணத்தை நெறிப்படுத்திய மற்றும் தொலைநோக்கு சிந்தனை மிக்க மனிதர்களாக மாற்றியமத்த கஜபா இல்லத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அதேநேரம் மனிதாபிமான நடவடிக்கைகளில் 2009 ஆம் ஆண்டு வரையான ஈடுபட்டிருந்த காலப்பகுதியில், முக்கியமாக நடவடிக்கைகள் பலவற்றில் பங்கெடுத்த 175 அதிகாரிகளும் 4075 சிப்பாய்களும் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அதேபோல் 180 அதிகாரிகள் மற்றும் 4030 சிப்பாய்கள் நிரந்தரமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மிக முக்கியமான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற கோகிலாய் (1895), திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, ஓமந்தை, புளியங்குளம், கனகராயன்குளம், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர்.

அவர்களில் வடமராட்சி பகுதியில் (1987) இடம்பெற்ற நடவடிக்கைளின் போது 1 வது கஜபா படையணி மற்றும் 3 வது கஜபா படையணியினருக்கு கேணல் விமல விஜரத்ன தலைமை தாங்கினார். கஜபா படையணியின் மைல் கல் இலக்காக கருதப்படும் மேற்படி நடவடிக்கைகளின் போது, 1 வது கஜபா பட்டாலியன்களின் 2 வது கட்டளை அதிகாரியாக தற்போதய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார்.

மீண்டும் 1990 இல், யாழ்ப்பாணக் கோட்டைக்குள் எந்தவிதமான விநியோக வழியும் இல்லாமல் முற்றுகையிடப்பட்ட படையினரை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த புகழ்மிக்க இராணுவ வீரரான மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவாவின் கட்டளையின் கீழ் பணியாற்றிய அதிஷ்டசாலிகளில் அவரும் ஒருவராவார். இந்த நடவடிக்கைகளின் போது அவர் செய்த அர்ப்பணிப்பு அவருக்கு 'ரண விக்கிரம பதக்ம்' மற்றும் 'ரண சூர பதக்கம்' போன்ற இராணுவ பதக்கங்களை பெற்றுக்கொள்ள வழிவகுத்து. அத்தோடு எதிரிகளுக்கு முன்பாக அவரது துணிச்சலான செயல்கள் அவரது மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டன.

கஜபா படையணியின் ஸ்தாப தலைவரான பிரிகேடியர் விஜய விமலரத்ன மற்றும் லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆகியோருடன் சென்ற போது அராலித்துறையில் பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்த நிலையில் அவர்களுக்கான படையணி கௌரவ பதக்கங்கள் 2007 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஷ அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு கஜபா படையணியின் வரலாற்றில் முக்கிய அம்சமாக ஓகஸ்ட் 2019 இல் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இராணுவ தளபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் கஜபா படையணியினால் தெரிவு செய்யப்பட்ட முதல் இராணுவ தளபதியும் அவராவார். அத்தோடு வீர விபூஷண பதக்கம், ரண விக்கிரம பதக்கம், ரண சூர பத்தம் என்பவைகளையும் அவர் பெற்றுகொண்டுள்ளதோடு, கஜபா படையணியிணியிலிருந்து ஓய்வுபெற்ற கேணலாக இருந்த வீரர் இலங்கையின் தற்போதை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளமையையிட்டு படையணி பெருமைகொள்கிறது.

அதேபோல் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன நாட்டின் பாதுகாப்பு செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத்து என்பதுடன் நாட்டின் இரு பாதுகாப்பு செயலாளர்களை உருவாக்கிய எனது வரலாற்றையும் கஜபா படையணி கொண்டுள்ளது. சாலியபுர கஜபா படையணியின் தலைமையகத்திலுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை ஜெனரல் ஷவேந்திர சில்வா மேற்கொண்டுள்ளார்.

மேற்படி தலைமையகம் நாட்டின் காலரனாகவும் விளங்குகின்றது. அதேவேளை ஜனாதிபதி இராணுவ தின நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு கஜபா படையணியின் ஆண்டு பூத்தி விழாவின் பிரதம அதிதியாக இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம், ஏடிசி அவர்கள் கலந்துகொண்டு அனைத்து இலைங்கயர்களின் மனங்களிலும் இடம்பிடித்தவர்களும் போர்க்களத்தில் உயிர் நீத்தவர்களுமான வீரர்களுக்கான அஞ்சலியும்செலுவார என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.