Header

Sri Lanka Army

Defender of the Nation

13th October 2021 13:35:50 Hours

மஹவ வைத்தியசாலை வார்டுகள் கொவிட் – 19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றியமைப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவு மற்றும் 141 வது பிரிகேட் சிப்பாய்களால் குருணாகல் மாவட்டத்தின் மஹவ பிராந்திய வைத்தியசாலையிலுள்ள இரண்டு வார்டுக்கள் கொவிட் – 19 சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைக்கப்பட்டு 5 ஒக்டோபர் 2021 அன்று வைத்தியசாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

அப்பகுதியில் தொற்றுநோய் பரவல் உக்கிரமடைந்த நிலையில் 5 செப்டம்பர் 2021 அன்று மேற்படி வார்டுகளை மாற்றிகமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. திட்டத்திற்காக மொத்தமாக ரூ .3.5 மில்லியன் ரூபாய் செலவாகுமென மதிப்பீடு செய்யப்படடிருந்த நிலையில் 2 மில்லியன் ரூபாய் செலவில் படையினரால் இத்திட்டம் நிறைவு செய்யப்பட்டிருந்தமையால் நாட்டிற்குள் 1.5 மி ரூபாய் பணம் சேமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வார்டுகளை திறந்துவைக்கும் நிகழ்வில் 143 வது பிரிகேட் தளபதி கேணல் டீ.என்.எப் கிச்சிளன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்ததோடு,குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளர் பிரமித்தா சாந்திலதா மற்றும் 1 வது தேசிய பாதுகவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேஏடிஏபீவி குமாரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.