Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2021 18:22:45 Hours

இராணுவ தலைமையகத்திற்கான வருகையின் போது இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இந்திய இராணுவ தளபதிக்கு வரவேற்பு

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வேண்டுகோலுக்கினங்க இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுன்ந் நரவனே பீவீஎஸ்எம், ஏவீஎஸ்எம், எஸ்எம், வீஎஸ்எம், ஏடிசி , அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் ஒரு அங்கமாக புதன்கிழமை (13) இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த வேளையில் அவருக்கு இராணுவத்தி்னரால் சிகப்பு கம்ளபம் விரிக்கப்பட்டு வரவேற்கப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் புரிந்துணர்வுகளை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது இதன்போது இந்திய அமைதிகாக்கும் படைகளின் கீழ் இலங்கையில் சேவையாற்றிய இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்களுக்கு படைப்பிரிவு கௌரவ அணிவகுப்பு மற்றும் மரியாதை அணிவகுப்பு என்பனவும் செலுத்தப்பட்டு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இராணுவ தலைமையக நுழைவாயில் வளாகத்திற்கு வருகை தந்தபோது இந்திய இராணுவ தளபதியவர்களுக்கு இலங்கை காலாட் படை சிப்பாய்களால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன்போது இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க அவர்களால் இந்திய தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டு மரியாதைகளை ஏற்பதற்கான விஷேட அரங்கிற்கு வீறுநடையில் அழைத்துச் செல்லப்பட்டார். அதனை தொடர்ந்து அணிவகுப்புக்கு ஆணையிடும் அதிகாரியால் வரிசைக்கிரமான படையினரின் அணிவகுப்பை பார்வையிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து படையினரால் கௌரவிக்குக்கான அணிவகுப்பு வண்ணமயமாக நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்து நரவனே அவர்களுக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் இராணுவ தலைமையகத்தின் நுழைவு வளாகத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட உள்ளிட்ட பிரதான பதவி நிலை அதிகாரிகளை இந்திய இராணுவ தளபதியிடம் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பு உறவுகள் தொடர்பில் கலந்தாசிக்கப்பட்டன. இங்கு 1987 ஆம் ஆண்டி எல்ரீரீஈ பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை காலத்தில் இந்திய அமைதிகாக்கும் படையின் கட்டளையிடும் அதிகாரிகயாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னி உள்ளிட்ட பகுதிகளில் எல்ரீரீஈ வன்முறைகளுக்கு எதிராக செயற்பட்ட நினைவுகளையும் பரிமாறிக்கொண்டனர்.

இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையில் காணப்படும் தற்கால சிக்கல்கள் மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது. அதேபோல் இருநாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வுகளை பலப்படுத்திக்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்திகொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதன்போது இந்திய இராணுவ தளபதியால் சைபர் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறுபட்ட வகைகளில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பில் இருநாட்டு இராணுவங்களும் சர்வதேச தரத்துக்கமைய கட்டமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அதனையடுத்து கருத்து தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இருதரப்பு அப்பியாசப் பயிற்சிகள் மற்றும் போர் பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய இராணுவ சிப்பாய்களை பங்குபற்ற அனுமதித்தமைக்கு இந்திய இராணுவ தளபதிக்கு நன்றிகளை கூறிக்கொண்டார்.

மேலும் இந்த சந்திப்பின் போது இலங்கை இராணுவ சிப்பாய்கள் மற்றும் இந்திய இராணுவ சிப்பாய்களின் பங்கேற்புடன் இடம்பெற்று வரும் “மித்ர சக்தி” அப்பியாச பயிற்சிகள் தொடர்பிலான் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய இராணுவ தளபதி இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெறும் பயிற்சி வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் எதிர்காலத்தில் அந்த வரைமுறைகளை விஸ்தரிப்பதற்கு அவசியமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இருநாட்டு தளபதிகளும் இணக்கப்பாட்டிற்கு வந்தனர். மேலும் இந்திய இராணுவ தளபதி இலங்கையுடன் காணப்படும் நட்புறவு, பாதுகாப்பு தொடர்பாடல்களை மேலும் ஊக்குவிப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் இலங்கை இராணுவத்தின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தவற்கான இந்திய இராணுவத்தின் தொழில்நுட்ப உதவி தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இராணுவ தளபதியின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் நிறைவில் இரு நாட்டு தளபதிகள் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிகொள்ளப்பட்டதோடு, இராணுவ தளபதி அலுவலகத்திலிருந்து வெளியேறும் முன்பாக இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இராணுவ தளபதி அலுவலகத்திலுள்ள விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.

அதனைய தொடர்ந்து விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய இராணுவ தளபதி இராணுவ தளபதியின் அலுவலகத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சிற்கு செல்வதற்கு முன்பாக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பங்கேற்புடன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலும் கலந்துகொண்டார்.