14th October 2021 13:27:08 Hours
அனுராதபுரம் சாலியபுரவிலுள்ள கஜபா படையணியின் தலைமையகத்தில் (ஒக்டோபர் 14) கஜபா படையணியின் ஆண்டு விழா நிகழ்வினை முன்னிட்டு படையணியின் தளபதியும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு புதன்கிழமை (13) சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
14 ஆம் திகதி வியாழக்கிழமை நிகழ்வின் பிரதம அதிதியாக இந்திய இராணுவ தளபதி சாலியபுராவில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம், ஏடிசி அவர்கள் பங்கேற்க வருகை தரவிருக்கும் நிலையில் புதன்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
சாலியபுர தலைமையகத்தின் நுழைவாயில் பகுதிக்கு வருகை தந்தவுடன் இராணுவ தளபதிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவான மரியாதைகள் அளிக்கப்பட்டன. மாலை நேரத்தில் படையணி தலைமையகத்தில் அதிகாரிகளுக்காக நிறுவப்பட்ட தங்குமிடக் கட்டித்தொகுதியை திறந்து வைக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு தளபதியவர்களால் கட்டிம் திறந்து வைக்கப்பட்டது.
அதனையடுத்து படைப்பிரிவு வளாகத்திற்குள் வருகை தந்த தளபதி கஜபா படையணியின் ஸ்தாபக தலைவர் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் பங்களிப்பை நினைவகூறும் வகையில் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேற்படி மரியாதை அணிவகுப்பில் 42 அதிகாரிகள் மற்றும் 520 சிப்பாய்களும் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து நிகழ்வின் சிறப்பு விருந்தினரான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு பாதுகாவர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அடுத்ததாக படையணித் தளபதி படையினருக்கான உரையினை நிகழ்த்தியிருந்ததோடு, உரையில் இராணுவ தின நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கஜபா படையணியின் ஓய்வுபெற்ற அதிகாரியான அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகளை கூறிக்கொண்டார்.
கஜபா படைணியின் 38 வது ஆண்டு விழாவில்பிரதம விருந்தினராக இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த நரவனே அவர்கள் வருகை தந்துள்ளமை படையணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவமெனவும் இது ஒரு மைல்கல் இலக்காக கருத்தப்படுகின்றது எனவும் தளபதியின் உரையில் சுட்டிக்காட்டினார் அதேபோல் கஜபா படையணயின் 1 வது தளபதியாகவும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாகவும் முதலாவது ஜெனரலாகவும் நிலை உயர்வுகளை பெறுவதற்கு வழிகாட்டியவர்களுக்கும் மேற்படி பதவிகளை வகிப்பதற்கான தைரியம் மற்றும் ஊக்குவிப்பை வழங்கியவர்களுக்கும் தளபதி நன்றிகளை கூறிக்கொண்டார்.
அத்தோடு கஜபா படையணியின் ஸ்தாபக தந்தையான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்கள் கஜபா குடும்பத்தில் தான் 2 வது லெப்டினனாக இணைந்துகொள்வதற்கு வழிகாட்டியாக இருந்துள்ளார் என்பதை நினைவுகூர்ந்த தளபதியவர்கள், படைப்பிரிவின் முன்னேற்றத்திற்கான தியாகங்கள் மற்றும் சாதனைகளுக்காக புரிந்தமைக்கான பிளாட்டூன் சார்ஜென்ட், சார்ஜென்ட் ஜெயசுந்தர ஆகியோர் உட்பட கஜபா படையணியில் உயிர் நீத்த சகல வீரர்களுக்கும் ஆத்ம சாந்தி கிடைக்க வேண்டுமெனவும் பிராத்தித்துக் கொண்டார்.