Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2021 15:06:58 Hours

கஜபா படையணியில் இந்திய இராணுவ தளபதிக்கு உயரிய மரியாதையுடன் வரவேற்பு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவின் வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை சிறப்பிக்கும் வகையில் சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படையணியின் தலைமையம் இன்று (14) காலை 38 ஆவது ஆண்டு விழாவை பிரதிபலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதன்போது அங்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ தளபதிக்கு கஜபா படையணி தலைமையகத்தின் நுழைவாயில் வளாகத்தில் சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, படையணியின் பிரதி தளபதியவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

படையணி வளாகத்திற்குள் வருகை தந்த தளபதிக்கு கஜபா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதம விருந்தினர் கஜபா இலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனையடுத்து அணிவகுப்பு மைதானத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மேற்படி அணிவகுப்பு மரியாதை வாத்திய இசையுடன் நேர்த்தியான உடையணிந்த சிப்பாய்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

படையணியின் அனைத்து பட்டாலியன்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 42 அதிகாரிகள் மற்றும் 520 சிப்பாய்களின் பங்கேற்புடன் பிரதம விருந்தினருக்கு சிறப்பு வரவேற்பளிப்பதற்கான அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது மறையாத நினைவுகளை கொண்டுச் சேர்க்கும் வகையில் இந்திய இராணுவ தளபதி அவரது பாரியாருடன் குழு புகைப்படும் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து படைப்பிரிவு வளாகத்தில் நாக மரமொன்றை நாட்டி வைக்குமாறு இந்திய இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு, இந்திய இராணுவ தளபதிக்கு சிறப்பு நினைவு பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது. சாலியபுரவிற்கான விஜயத்தை தொடர்ந்து அவர் விருந்தினர் புத்தகத்தில் கஜபா படையணி தலைமையகத்திலுள்ள விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.

இந்நிகழ்விற்கு இணையாக, இராணுவ சேவா வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களினால் இந்திய இராணுவத்தின் பிரதிநிதிகளுடன் இராணுவ துணைவியர் நல சங்கத்தின் தலைவர் திருமதி வீணா நாரவனே அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவரான அதிகார ஆணையற்ற அதிகாரி , 1வது கஜபா படையணியின் தினேஷ் பிரியந்த ஹேரத் அவர்களை நிகழ்வின் பிரதம அதிதியான ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

இந்நிய இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளான, பொதுப்பணி பணிப்பாளரும் இராணுவ தலைமையக பயிற்சி கட்டளைகள் பணிப்பாளர் ஜெனரல் ரஜீவ் தாப்பர், இந்திய இராணுவ தளபதியின் இராணுவ உதவி அதிகாரி மேஜர் ஜெனரல் விக்ராந்த் நாயக், கேணல் மந்தீப் சிங் தில்லோன் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.