Header

Sri Lanka Army

Defender of the Nation

13th October 2021 14:30:06 Hours

இலங்கை இராணுவத்தின் கொவிட் - 19 முகாமைத்துவ பணிகளுக்கு இந்திய இராணுவ தளபதி பாராட்டு

ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம், ஏடிசி, அவரது குழுவினருடன் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்து கலந்துரையாடிய சில நிமிடங்களின் பின்னர் இன்று (13) காலை இராணுவ தலைமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்களின் சுருக்கமான விளக்கவுரை

எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் விருந்தோம்பலை வழங்கிய இலங்கை அரசு மற்றும் இலங்கை மக்கள் மற்றும் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன். தற்போதைய எனது பதவி நிலையில் இலங்கைக்கான எனது முதல் விஜயம் இதுவேயாகும். இந்திய அமைதிகாப்பும் படைகளின் கீழ் சேவைபுரிந்த காலங்களில் இருந்து இருநாட்டு படையினரதும் ஒத்துழைப்புகள் தொடர்பான புரிந்துணர்வு தொடர்கிறது என தெரிவித்தார்.

எனது வருகை தற்போதைய இந்தியா - இலங்கை கூட்டு இருதரப்பு இராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி’யுடன் ஒத்துப்போகிறது. ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் இந்த பயிற்சியின் உச்சக்கட்ட கட்டத்தை நான் காண்கிறேன். இந்த பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இலங்கை முதிர்ச்சி அடைந்த நாடு என்பதற்கு நாட்டில் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களே உதாரணமாக உள்ளனர் எனத் தெரிவித்த அவர் இரு இராணுவங்களுக்கும் இடையிலான ஒரே விதமான பண்புகள் பற்றியும் எடுத்துரைத்தார். “இராணுவத்துக்கு இராணுவம்” என்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை தான் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது குறித்த தொகை இந்திய இராணுவ அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகள், பயிலிளவல் அதிகாரிகள் ஆகியோருக்கான பயிற்சிகளை வழங்கியுள்ளமையையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த அவர் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பெருமை மிக்க மாணவர்களுள் ஒருவராக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இருந்தமையையும் நினைவூட்டினார்.

அதேபோல் கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் பாரதூரமடைந்த தருணங்களிலும் சகலரும் தொடர்பில் இருந்தாகவும் அதன்போதான ஜெனரல் ஷக்ஷேந்திர சில்வா அவர்களின் பங்களிப்பு மிகவும் வரவேற்கதக்கதாக இருந்ததெனவும் தெரிவித்தார். மேலும் அடுத்த சில தினங்களில் இராணுவ அதிகாரிகள் மற்றும் அதிமேதகும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரை சந்திக்க தான் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.