Header

Sri Lanka Army

Defender of the Nation

13th October 2021 18:10:50 Hours

பாதுகாப்புச் செயலாளருடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்ட இந்திய இராணுவ தளபதி

இந்திய இராணுவ இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், , விஎஸ்எம் ஏடிசி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) அவர்களை இன்று (புதன்கிழமை 13) ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இதன்போது இந்தியத் தூதுக்குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, அவர்களை பாதுகாப்பு செயலாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த சந்திப்பின் போது, இருவரும் பயிற்சி தொகுதிகளை வலுப்படுத்தல் மற்றும் ஏனைய பொது விடயங்களுக்கான இருதரப்பு ஒத்துழைப்பு என்பவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.

சந்திப்பின் நிறைவிவ் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்களினால் இந்திய இராணுவ தளபதிக்கு நினைவு பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டதன் பின்னர் அவர் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.

ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, அவரது பாரியாரும் இந்திய இராணுவத்தின் இராணுவ துணைவியனர் நலச் சங்கத்தின் தலைவியுமான திருமதி வீணா நரவனே, உட்பட இலங்கைக்கான நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள ஐவர் அடங்கிய குழுவினர் அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.