Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2021 21:05:59 Hours

52 வது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் கீழுள்ள 522 வது பிரிகேடின் 15 வது கஜபா படையணி படையினரின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாணம் புத்தூரிலுள்ள “மடிஹே பண்ணசீஹ” சிங்கள மற்றும் இந்து கலவன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இது 52 வது படைப்பிரிவின் மேலுமொரு சமூகத் திட்டமாகும்.

வண. மடிஹே பண்ணசீஹ சிங்கள மற்றும் இந்து கலவன் பாடசாலை யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியிலுள்ள பின்தங்கிய சிங்கள மற்றும் இந்து மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் வகையில் 1967 ஆம் ஆண்டில் மடிஹே பண்ணசீஹ நாயக்க தேரரினால் நிர்மாணிக்கப்பட்டது.

வாரியபொல பகுதியை சேர்ந்த வடுகெதர சாராநந்த தேரர், திரு சுரேஷ் தர்மசேன, பியகம சுப்ரீம் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தின் திரு சுரேஷ் சந்திரபால, கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் 98 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரால் 522 வது பிரிகேட் தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி திட்டத்திற்கு நன்கொடை வழங்கினர்.

இந்நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு 52 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் வண. மடிஹே பண்ணசீஹ சிங்கள மற்றும் இந்து கலவன் பாடசாலை அதிபர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.