Header

Sri Lanka Army

Defender of the Nation

12th October 2021 01:48:50 Hours

இருதரப்பு ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் ஒத்துழைப்புக்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய இராணுவ தளபதி நல்லெண்ண விஜயம்

நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம், ஏடிசி அவர்களும் அவருடன் வருகை தந்திருக்கும் குழுவினருக்கும் கண்டிய ‘வெஸ்’ நாடக கலைஞர்களின் திறமான கலை நிகழ்வு அம்சங்களுடன் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இன்று (12) காலை சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது அவரது பாரியார் இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் இணைந்து ஐந்து நாள் நல்லெண்ண சுற்றுப்பயணத்தில் இருக்கும் தூதுக்குழுவிற்கும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே மற்றும் அவரது பாரியார் திருமதி வீணா நரவனே ஆகியோருக்கு சிறப்பு வரவேற்பளித்தனர்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்கள் முப்படை சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார். அத்தோடு இந்திய உயர்ஸ்தானிகர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் அவர் சாலியபுரவிலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் நடைபெறவுள்ள (14 ஒக்டோபர்) நடைபெறவுள்ள மரியாதை அணிவகுப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

அவரது விஜயத்தின் போது அவரது பாரியாரும் இந்திய இராணுவ துனைவியர் நலன்புரி சங்கத்தின் தலைவியுமான திருமதி வீணா நவரனே, பொதுப்பணி பணிப்பாளரும் இராணுவ தலைமையக பயிற்சி கட்டளைகள் பணிப்பாளர் ஜெனரல் ரஜீவ் தாப்பர், இந்திய இராணுவ தளபதியின் செயலாளர் மேஜர் ஜெனரல் விக்ராந்த் நாயக், கேணல் மந்தீப் சிங் தில்லோன் ஆகியோர் ஜயஸ்ரீ மகா போதியிற்கு வழிபாடுகளுக்காக செல்லவுள்ளனர்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களினால் இந்திய இராணுவ துணைவியர் நலச் சங்கத்தின் தலைவி திருமதி வீணா நரவனே அவர்களுக்கு மலர் செண்டு கொடுத்து வரவேற்பளித்தார். இந்திய இராணுவ தளபதி விமான நிலையத்திற்கு வருகை தந்தவுடன் விமான நிலையத்திலிருக்கும் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.

வருகை தரும் இந்திய இராணுவ தளபதிக்கு புதன்கிழமை (13) இராணுவத் தலைமையகத்தில் படையினரால் வழங்கப்படும் சிறப்பு மரியாதை அணிவகுப்பிற்கு பின்னர் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.