Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2021 21:15:59 Hours

சந்தேக நபர்கள் மற்றும் கடத்தல் மஞ்சள் மன்னார் படையினரால் மீட்பு

54 வது படைப்பிரிவின் 543 வது பிரிகேடின் கீழுள்ள 7 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் திங்கட்கிழமை (11) மன்னார் பாலத்தின் மீது காணப்படும் படையினரின் வீதி தரடயில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்ததோடு லொறியொன்றில் அவர்களால் ஏற்றிச் செல்லப்பட்ட 1150 கிலோ கடத்தல் மஞ்சளும் மீட்கபட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமை (11) அதிகாலை 1.30 மணியளவில் லொறியொன்றை சோதனையிட்ட போது அதிலிருந்த சந்தேக நபர்கள் கடத்தல் பொருட்களை ஏறாவூருக்கு எடுத்து செல்லவிருந்தாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் 54 வது படைப்பிரிவு தலைமையக புலனாய்வு படையினர் மற்றும் 8 வது விஜயபாகு காலாட்படை படையினர் இணைந்து சனிக்கிழமை (09) மன்னாரின் பொதுப்பகுதியொன்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, மன்னார் கொண்டச்சி பகுதியிலிருந்து 483 கிலோ கடத்தல் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு மீட்கப்பட்ட மஞ்சள் தொகையின் பெறுமதி 2 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு படையினரால் மோட்டார் சைக்கிள், படகு இயந்திரம், எரிபொருள் நிரப்பக்கூடி கொள்கலன்கள் என்பனவும் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரால் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கி வரப்படுகின்றமையும் கடந்த சில தினங்களிலும் மன்னார் பகுதியிலிருந்து கடத்தல் மஞ்சள் மற்றும் போதைப் பொருட்களையும் மீட்டுள்ளனர்.