10th October 2021 17:03:22 Hours
சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற 72 ஆவது இராணுவ ஆண்டு பூர்த்தி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் கஜபா படையணியின் படைத் தளபதியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தொகுதியானது திறந்து வைக்கப்பட்டது. இத்தொகுதியானது படைத் தளபதி காரியாலயம், நிலையத் தளபதி காரியாலயம், பிரதி நிலையத் தளபதி காரியாலயம், பணிநிலை அதிகாரிகள் காரியாலயங்கள் மற்றும் அங்கசம்பூரணமான மாநாட்டு மண்டபங்கள் இரண்டும் உள்ளடங்கியுள்ளது.
மகா சங்கத்தினரின் “செத் பிரித்” பாராயணங்களுக்கு மத்தியில் கெட்டேரியன்கள், பயன்பாட்டிற்காக நிறுவப்பட்ட புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது பெயர்பலகையும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டதோடு, இந்நிகழ்வின் ஆரம்பகட்டமாக கஜபா படையணியின் ஸ்தாபக தலைவர் விஜய விமலரத்ன அவர்களின் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது தனது வழிகாட்டியின் நினைவுகளை முன்னாள் போர் வீரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் நினைவுகூர்ந்தமை நெகிழ்ச்சியான தருணமாக அமைந்திருந்தது. பின்னர் படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நடுதல் மற்றும் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அலுவலகத்திலுள்ள விருந்தினர் பதிவேட்டிலும் எண்ணங்களை பதிவிட்டார்.
அதேபோல் குறித்த நிகழ்வின் மற்றுமொரு அம்சமாக 200 அதிகார ஆணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்ட்களுக்கான வசதிகளுடனான உணவருந்தல், ஓய்வு மற்றும் மீள்ஒழுங்கமைப்பிற்கான இரண்டு மாடி உணவகம் பெயர்பலகை திரை நீக்கம் செய்து நாடா வெட்டி ஜனாதிபதியவர்களால் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோருடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடமானது கஜபா படையணியின் படைத் தளபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பொறியியல் சேவைப் படையணி படையினரால் 3-4 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டது. அடுத்த நிகழ்விற்கு செல்வதற்கு முன்பதாக பிரதம அதிதி குறித்த கட்டத்தின் இரண்டாம் மாடியில் இருந்து வளாக சுற்றுசூழலினை ரசித்தார்.