Header

Sri Lanka Army

Defenders of the Nation

10th October 2021 15:24:50 Hours

72 வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்கான அதிமேதகு ஜனதிபதியின் வருகையோடு “கஜபா இல்லம்” புதிய வரலாற்றை பதிவு செய்கிறது

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த சில காலங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் அதிகாரியாக சேவையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களுக்கு வரவேற்பளிப்பதற்காக (ஒக்டோபர் 10) சாலியபுரவிலுள்ள “கஜபா இல்லம்” விழாக்கோலம் பூண்டிருந்ததோடு இராணுவ கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆண்டு விழாவிற்கு பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் கலந்துகொண்ட போது, கெட்டேரியனாக (கஜபா வீரராக) தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பித்த தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களும் வருகைத் தந்ததை தொடர்ந்து மேற்படி இருவருக்கும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் கஜபா படையணியின் படைத் தளபதியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் ஆரம்பமான ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததுடன் ஆண்டு பூர்த்தி நிகழ்வுகளின் இறுதி பிரதான நிகழ்வின் முதல் அம்சமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு கஜபா படையணியின் மைதான வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனையடுத்து ஜனாதிபதி அவர்களால் கஜபா படையணியின் புதிய அணிவகுப்பு மைதானத்தின் பெயர் பலகையை திறந்து வைக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துவதற்கான வரவேற்பு சீராண உடையணிந்த 25 படையணிகளின் 94 அதிகாரிகள் மற்றும் 712 சிப்பாய்கள் பங்கேற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் இராணுவ தளபதி அவர்களின் வருகையை தொடந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு, 72 வருட கம்பீரமிக்க பாரம்பரியத்தை கொண்டுள்ள இராணுவ கீதம் இசைக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கமைவான அணிவகுப்பு மரியாதை ஒழுங்குகளுக்கு முன்பதாக அன்றைய பிரதம அதிதியான நாட்டுத் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களிடம் அணிவகுப்பு மரியாதையின் கட்டளை அதிகாரியினால் பிரதம அதிதியிடம் அனுமதி கோரப்பட்டது. பின்னர் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்ட பிரதம அதிதி ஆண்டு நிறைவு விழாவிற்கான சிறப்புரை நிகழ்த்தினார்.

இதன்போது இலங்கை சமிஞ்சை படையணி, இலங்கை சிங்கப் படையணி, ரஜரட்ட ரைபில் படையணி ஆகியவற்றின் இணைந்துகொண்டதன் பின்னர், கஜபா படையணியில் இணைந்துகொண்ட விதம் தொடர்பிலும் கஜபா படையணியை நிறுவுவதற்கு சாலியபுர தன்னால் தெரிவு செய்யப்பட்டது என்றும் விளக்கமளித்த ஜனாதிபதி படையணியின் புதிய கட்டிட கட்டுமானங்கள் , வளாகத்தின் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த அவர் இராணுவ வீரராக இருந்து ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டமை அதிஸ்ட வசமானதாகும் எனவும் தெரிவித்தார்.

நான் உறுதியளித்தபடி இன்னும் பல பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அவற்றில் ஒன்று, விவசாயத்திற்கு சேதன உரத்தை அறிமுகப்படுத்தியது, இது அனைவராலும் செய்ய முடியாதது, மேலும் எதிர்காலத்தில் நிச்சயம் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்தார். இதன்போது இதில் ‘ஒரே நாடு - ஒரு சட்டம்’ என்ற உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. தேசிய வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் இலங்கை இராணுவம் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உண்மையான பங்களிப்பாளர்களாகப் போற்றத்தக்க பங்களிப்பை செய்கின்றனர். இன்று வழங்கப்பட்ட விழாகோலமான மற்றும் மிகவும் வைபவரீதியான அணிவகுப்பு, இராணுவத் தொழிலின் தரம் மற்றும் கண்ணியத்தை அடையாளப்படுத்துகிறது "என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உலகின் இராணுவ படைகள் போர்களுக்கு மட்டுமல்ல, தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளிலும் பங்களிக்க வேண்டும். தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் போது முப்படையினரின் ஒற்றுமையுடனான பங்களிப்பு அர்ப்பணிப்புடன் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். 'ஒரு - நாடு ஒரு சட்டம்' கீழ் ஊழல் இல்லாத நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் கொவிட் -19 பின்னடைவுகள் இருந்தபோதிலும் அரசாங்கம் கனிசமான அளவு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் கடந்த வருடங்களில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முப்படையினர் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக நிகழ்ந்த தாக்குதல்களை போன்று எந்த ஒரு மத தீவிரவாத தாக்குதல்களும் மீண்டும் நிகழ அனுமதிக்க முடியாதெனவும் நாட்டில் புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதோடு புதிய அரசியலமைப்பொன்றும் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதற் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஸ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சித்திரானி குணரத்ன, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், ஓய்வுபெற்ற கஜபா படையணியினர் மற்றும் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகள், படைப்பிரிவு தளபதிகள், இராணுவ தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ தலைமையகத்தின் பணிப்பாளர்கள், சிரேஸ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஸ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.