Header

Sri Lanka Army

Defender of the Nation

10th October 2021 18:38:01 Hours

அச்சம் மற்றும் தன்னலமற்ற வீரர்களால் இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தினம் கொண்டாட்டம்

நமது நாடு பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை நோக்கி தடையில்லா மற்றும் கடினமான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தருணத்தில் அதன் பாதுகாப்பு கேடயமாக, விளங்கும் இலங்கை இராணுவம் தனது 72 வது பிறந்தநாளை இன்று (10) கொண்டாடுகிறது. கடமை மீதான பற்று மற்றும் அரப்பணிப்பு என்பவற்றுடன் தேசத்தை விட முதன்மையானதாக ஒன்றுமில்லை என்ற எண்ணக்கருவுடன் பணியாற்றி வருகிறது.

இந்த ஆண்டு நிறைவு விழாவின் போது, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாகவும் இராணுவ தளபதியாகவிருக்கும் ஜெனரல் ஷவேந்திர அவர்களால் போர் வீரர்கள் நினைவுகூறப்பட்டதோடு, காயமடைந்த போர் வீரர்கள், சிரேஸ்ட போர் வீரர்கள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கும் இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அத்தோடு ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் வரலாற்றில் முதல் தடவையாக சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படையணியின் தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் இலங்கை இராணுவத்தின் ஆண்டு நிறைவு விழாவின் பிரதம அதிதியாக கலந்துகொண்டமைக்காக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்தோடு அதிமேதகு ஜனாதிபதியவர்கள் கஜபா படையணியின் முன்னாள் வீரர் என்பதால் இவ்வருடம் இராணுவ தினம் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. மேலும் இந்நிகழ்வின் போது இராணுவ அதிகாரிகள் 567 பேருக்கும் சிப்பாய்கள் 10368 பேரும் நிலை உயர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை இராணுவமானது 1949 ஒக்டோபர் 10 ஆம் திகதி சிலோன் இராணுவமாக அதன் முதலாவது நிரந்தர படையணியை பிரிகேடியர் ஆர். சின்க்ளேயரின் கட்டளையின் கீழ் உருவாக்கி, தியதலாவையில் தனது சொந்த இராணுவ அகாடமியை நிறுவியது. பின்னர், பிரிகேடியர் என்டன் முத்துகுமாரு அப்போதைய இலங்கை இராணுவத்தின் முதல் இலங்கைத் தளபதியாக பதவியேற்றார். கடந்த 72 ஆவது ஆண்டில் இராணுவ வாழ்நாளில் ஒரு முழுமையான தொழில்முறை இராணுவமாக மலர்ந்த இலங்கை இராணுவம் இன்றுவரை 23 தளபதிகளால் திறம்பட கட்டளையிடப்பட்டுள்ளது. அனைத்து இனங்களின் இதயங்களையும் மனதையும் வென்றுள்ள இந்த அமைப்பானது நாடு முழுவதும் 23 படையணிகள் மற்றும் பாதுகாப்பு படைத் தலைமையகளாக அதனை விரிவுபடுத்தி அனைவரினதும் முக்கியமான பாதுகாப்பு வழங்குநராக திகழ்கிறது

இலங்கை இராணுவமானது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பேரழிவுகள், அனர்த்தம், அவசரநிலைகள் போன்றவற்றில் அதன் ஒப்பிடமுடியாத சேவைகளை திறம்பட வழங்கிவரும் அதேவேளை நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கம், தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாத்தல், தேசிய கட்டுமான பணிகள், ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கான பங்களிப்பு, மனிதாபிமான திட்டங்கள், மிதிவெடி அகற்றல், வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களை நிர்மாணித்தல், வன செறிவாக்கல் , குள மறுசீரமைப்பு / புதுப்பித்தல் மற்றும் குளங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்களை தடையின்றி மேற்கொண்டு வருகின்றது.

இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக பதவி வகிக்கும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் சிறந்த ஒரு படை வீரராகவும் அனைத்து தரப்பு மக்களிடையேயும் தனக்கான ஒரு நன்மதிப்பினை பெற்றவரும் தனது தொலைநோக்கு கருத்தாக்கத்தை ஏற்கனவே அமைப்பில் வெற்றிகரமாக செயல்படுத்தியவருமாவார். அவர் எதிர்கால இராணுவ முன்னோக்குகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அமைப்புக்கு ஒரு புதிய முறையை மாற்றுவதில் உறுதியாக உள்ளார்.

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்பின் ஊடாக நாட்டில் உள்ள கொவிட்-19 நோய் தொற்றை இல்லாதொழிக்க திறமையான படையினர், சுகாதார அதிகாரிகள் மற்றும் கடற்படை விமானப் படைகளுடன் இணைந்து இதுவரை இறுதி முடிவுகளைக் கொண்டு வந்து, அதன் உலகளாவிய மட்டத்தில் சிறந்த செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளார். இராணுவத்தின் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தனிமைப்படுத்தும் பொறிமுறையானது உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஏனைய உலக அமைப்புக்களின் பாராட்டினை பெற்றுள்ளது. இதனூடாக கொவிட் தொற்று நோயினை கட்டுப்படுத்துவதில் உலகிலேயே தானும் முதல் இருப்பதனை நிரூபித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மனித வளக் கட்டமைப்பை கொண்ட அமைப்பின் வாழ்க்கை முறைக்கு ஔியூட்டும் வகையில் இராணுவத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்காக 2020-2025' முன்னர்வுக்கான மூலோபாய திட்டத்தினை முன்மொழிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இராணுவத்தினர் எந்தவித தயக்கமும் இன்றி நாட்டில் நிலவும் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பெருமளவில் பங்களித்ததுள்ளனர். அதே வழியில், இராணுவம் எப்போதும் முன்னணியில் இருப்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம், மேலும் இராணுவம் இந்த தேசத்தை தேசிய பேரழிவுகள், அவசரநிலைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவை தாக்கத்தின் போது இயல்புநிலையை சீக்கிரம் மீட்டெடுக்க பெரிதும் உதவுகிறது. இதேபோல், தற்போது இராணுவம் தேசிய வளர்ச்சியின் துறையில் ஒரு முன்னோடி பங்கை முன்னெடுத்து வருகிறது, எங்கள் நாடு ஒரு வளர்ச்சியடைந்து வரும் நாடாகும்.

ஏழு தசாப்தங்களாக கடந்த 22 இராணுவத் தளபதிகள் இலங்கை இராணுவத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே, சிரேஷ்ட அதிகாரிகள், படையணி சார்ஜென்ட் மேஜர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஆணையதிகாரமற்ற அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களின் தொடர் பங்களிப்பிற்கான இயலுமான தலைமைத்துவத்தினை வழங்கியுள்ளனர். இந்த ஆண்டு விழாவின் தொடக்கத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துகிறோம். அதேபோல், நம் நாடு அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செழிப்புடன் ஒரு புதிய பாதையில் செல்லத் தயாராக உள்ளது, அதற்கு காரணமான போரில் உயிர் நீத்த படையினர்கள் வரலாற்றில் ஒரு போற்றத்தக்க போர்வீரர்களாக திகழ்கின்றனர்.

72 ஆவது இராணுவ ஆண்டு நிறைவு மற்றும் இராணுவ தினமான (ஒக்டோபர் 10) தினத்தை முன்னிட்டு அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதியின் இராணுவ கொடிக்கு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளல், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு என்பன ஆண்டு நிறைவு விழா அம்சங்களில் முக்கியத்தும் பெற்ற அம்சங்களாக காணப்பட்டன. இவ்வாறான ஆண்டு நிறைவு விழாவின் இறுதிநாள் நிகழ்வாக கஜபா படையணி தலைமையகத்தில் வைபவ ரீதியாகவும் சிறப்பாகவும் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளதோடு இவ்வருட்டத்திற்கான ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் நிறைவடையவுள்ளன.