Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2021 22:00:59 Hours

இராணுவ ஆண்டு விழாவிற்கு "ஜய ஸ்ரீ மஹா போதி" வளாகத்தில் ஆசீர்வதம்

இராணுவத்தின் 72 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வை (ஒக்டோபர் 10) முன்னிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இராணுவ கொடிகளுக்கு ஆசிர்வாதம் பெறும் நிகழ்வானது சுபவேளையில் மங்களவாத்தியங்கல் மழங்க அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிய விகாரையில் இன்று (09) நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியான ஜெனரல் ஷவேந்திர சில்வா விகாரைக்கு வருகை தந்தவுடன் வழிபாடுகள் ஆரம்பமானதோடு, இதன்போது தளபதியினால் அடமஸ்தான வழிபாட்டு தளத்தின் தலைமை தேரரிடம் ஆசிகளை பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து “அவசாகய” பிக்குகளின் மடாலயத்திற்குச் சென்று அங்குள்ள பிக்குகளுக்கு “அட்டபிரிகர” வழங்கி மகா சங்கத்தின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் பாரம்பரிய மற்றும் மங்கள இசை வாத்தியங்களின் இசை மற்றும் நடனக் கலைஞர்களின் கலை அம்சங்களுடன் பிக்குகள் உடமலுவ வழிபாட்டு பீடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது இராணுவ கொடிகள் அனைத்தும் உடமலுவிற்குள் (மேல் அடுக்கு பகுதி)எடுத்துச் செல்லப்பட்டதோடு வெலிமலுவ (கீழ் அடுக்கு பகுதி) பகுதி வளாகத்திற்கு சீராண அடையணிந்த சி்பபாய்களால் இராணுவ கொடிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டதோடு ஒவ்வொரு படையணிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவ தொண்டர் படையணி உள்ளடங்களாக அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், முன்னரங்கு பராமரிப்பு பகுதிகள், பாதுகாப்பு படைப்பிரிவுகள், பிரிகேட் தலைமையகங்கள் , பயிற்சி நிலையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு படை பிரிவுகள் என்பவற்றின் கொடிகள் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்வதற்காக வெலி மாலுவ வளாகத்தில் சிரேஸ்ட அதிகாரிகளால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மூன்று கட்டங்களாக அதிகாரிகளால் ஏந்திச் செல்லப்பட்டதோடு (நடு மடுவம்) மெத மடுவ பகுதியில் வைக்கப்பட்டதை தொடர்ந்து விழா ஆரம்பமானதோடு இதன்போது மகா சங்கத்தினரால் “செத் பிரித்”பாராயணம் செய்யப்பட்டு அனைத்து கொடிகளுக்கும் ஆசிர்வாதம் வழங்கினர்.

ஜெனரல் சவேந்திர சில்வா புனித வெள்ளரசு மரத்தின் அடிப்பகுதியில் மல்லிகை மற்றும் தாமரை மலர்களை வைத்து இராணுவத்தில் பணியாற்றும் தேசத்தின் பாதுகாவலர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தார். அதனை தொடர்ந்து பிக்குகளால் அனுசாசன (சொற்பொழிவு) நிகழ்த்தபட்டபோது தாய்நாட்டிற்கான இராணுவத்தின் அர்ப்பணிப்புக்கள் பாராட்டப்பட்டதோடு சிரேஸ்டத்துவ அடிப்படையில் படையினருக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது.

“சங்க” குழுவினரின் நல்வாழ்வு மற்றும் புனித வழிபாட்டு தளத்தின் மேம்பாட்டு பணிகளுக்கான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் ஒரு மில்லியன் ரூபாய் பணம் ஜய ஸ்ரீ மஹா போதியவின் தலைமை தேரர் வண. பல்லேகம சிறீனிவாசபிந்தின நாயக்க தேரரிடம் வழங்கி வைத்தார். ஜய ஸ்ரீ மகா போதியவின் தலைமை தேரரால் மேற்படி நன்கொடை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

72 வது இராணுவ ஆண்டு நிறைவு விழா நிகழ்வின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வண்ணமாக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் ஜய ஸ்ரீ மகாபோதிய வளாகத்தில் நாக மரம் கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகள், படைப்பிரிவு தலைமையக தளபதிகள், நிலையத் தளபதிகள், முன்னரங்கு பராமரிப்பு பகுதி தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் பாரம்பரிய மற்றும் வண்ணமயமான கொடி-ஆசீர்வாத விழாவிற்கு முன்னதாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, கதிர்காமம், கிரிவெஹெர ஆகிய இடங்களிலும் கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும் இந்து மத ஸ்தானங்களிலும் கொடி-ஆசீர்வாத விழாக்கள் நடைப்பெற்றன. மேலும் இராணுவ தலைமையகத்தில் 'பிரீத்' பாராயணம் மற்றும் அன்னதானம் வழங்கலும் இடம்பெற்றது.

ஒக்டோபர் 1949 இல் உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவம், நாட்டின் மிக வலிமையான காலாட் படையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு தொண்டர் படை உட்பட 25 படை அலகுகளை கொண்டுள்ளதோடு, மேலும் தற்போது அதன் கட்டமைப்புக்குப் தேசத்தின் வளர்ச்சி மற்றும் கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் ஆகியவைக்கு தகுந்ததாக கட்டமைக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியையும் பெற்றுகொண்டது.