Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2021 13:41:42 Hours

மேலும் 4 நீர்ப்பாசன குளங்கள் சீரமைக்கும் பணிகள் முன்னெடுப்பு

அரசாங்கத்தின் "வாரி சௌபாக்கிய" திட்டத்திற்கு அமைவாக படையினர் மகாவலி "எல்" வலயத்தின் 4 குளங்களை சீரமைக்கும் பணிகள் 11 வது கள பொறியியலாளர்களின் பங்கேற்புடன் பொறியியல் பிரிகேட்டின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் மொத்தமாக 10 குயங்களை சீரமைக்கும் திட்டங்கள் இலங்கை இராணுவ பொறியாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு குளங்களின் சீரமைப்புப் பணிகள் 2021 ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இவை பொறியியல் பிரிகேடின் தளபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்று வருகின்றன.

மகாவலி அதிகார சபையுடன் இணைந்து இலங்கை பொறியியல் படையினர் குளங்களில் காணப்படும் கழிவுகளை அகற்றும் பணிகளையும் ஆரம்பித்துள்ளனர். இந்த திட்டங்கள் 800 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 700 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்வதற்கு பயனளிக்கும் என்பதுடன், இந்த திட்டங்களுக்கு மகாவலி அதிகாரசபை நிதியுதவி அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.