Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2021 16:19:04 Hours

51 வது படைப்பிரிவினரால் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு மர நடுகை

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இராணுவத்தின் 72 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பல நிகழ்ச்சித் திட்டங்கள் திங்கட்கிழமை (04) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதற்கமைய 512 வது பிரிகேடின் 14 வது கஜபா படையணி சிப்பாய்களால் யாழ்ப்பாணம் காரைநகர் வீதியோர பகுதிகளில் 100 மரக்கன்றுகளை நாட்டிவைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு சுற்றுச்சூழலுடனான நட்புறவு திட்டம் மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் புங்கை மற்றும் மருத மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

அத்தோடு 513 வது பிரிகேடின் 11 வது இலங்கை இலேசாயுத காலாட்படையினரால் சுள்ளிபுரம் விக்டோரியா கல்லூரி வளாகத்தில் பொது மக்களுக்கு தென்னங் கன்று மற்றும் பலா கன்றுகள் என்பனவும் விநியோகிக்கப்பட்டன.

அதேபோல் 513 வது பிரிகேடின் 16 வது கெமுனு ஹேவா படையினரால் முதியோர் தினத்தை முன்னிட்டு கல்வலை முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதற்கமைய இராணுவ தினத்தை முன்னிட்டு 50 முதியவர்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளின் போது 512 மற்றும் 513 பிரிகேட்களின் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் கட்டளை அலகுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் நிகழ்வில் பங்குபற்றினர்.

மேற்படி நிகழ்வுகள் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.