Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2021 12:21:42 Hours

காலாட் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்கிறார்

இராணுவ தலைமையகத்திலுள்ள காலாட்படை பணிப்பகளத்தின் 20 வது பணிப்பாளர் நாயகமாக கெமுனு ஹேவா படையின் மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி செவ்வாய்க்கிழமை (5) பதவியேற்றுக்கொண்டார்.

இதன்போது இடம்பெற்ற மத வழிபாடுகளுக்கு மத்தியில் புதிதாக நியமனம் பெற்ற காலாட் படை பணிப்பாளர் நாயகமாக புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

புதிய பணிப்பாளர் மேற்படி நியமனத்திற்கு முன்னதாக 54 வது படைப்பிரிவு தளபதியாக நியமனம் வகித்திருந்ததுடன், மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களின் ஓய்வையடுத்து புதிய பணிப்பாளர் நாயகம் மேற்படி நியமனத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.