Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2021 09:00:04 Hours

புதிய படையினர் விவகார பணிப்பாளர் அலுவலக கடமைகளை பொறுப்பேற்கிறார்

இலங்கை பொறியியல் படையின் பிரிகேடியர் மங்கள மாயாதுன்ன படையினர் விவகார பணிப்பகத்தின் 12 வது பணிப்பாளராக திங்கட்கிழமை (30) ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். மேற்படி பணிப்பகத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரிகேடியர் நளீன் எதிரிசிங்க மாதுருஓயா இராணுவ பயிற்சி கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பணிப்பாளர் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.

மேற்படி நியமனத்திற்கு முன்பாக பிரிகேடியர் மங்கள மாயாதுன்ன இலங்கை பொறியியல் படையணியின் நிலையத் தளபதியாக நியமனம் வகித்தார்.

பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.