Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2021 18:46:23 Hours

இராணுவ ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இராணுவ தலைமையகத்தில் இரவு முழுவதும் பிரித் பாராயணம்

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை (06) மாலை முதல் அன்றைய நாள் இரவு முழுவதுமாக பிரித் பாராயணம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றிருந்ததோடு அதன் நிறைவம்சமாக மறுதினம் காலை வேளையில் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவ தினத்தை முன்னிட்டு (10) இராணுவ பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரவு முழுவதுமான பிரித் பாராயண நிகழ்வு வண. அலுத்துநுவர அனுருத்த நாயக்க தேரர் தலைமையில் கோட்டே ரஜமகா விகாரையின் மெதகொட அபேதிஸ்ஸ நாயக்க தேரர் மற்றும் கிரிந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரர் ஆகியோரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக தேரர்கள் இராணுவ கலாசார குழுவினரின் நடனத்துடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து பாராம்பரிய வாத்திய இசைக்குழுவினரால் கொடிகள் ஏந்திய அணிவகுப்புடன் நிகழ்வின் பிரதம அதிதியான பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் வழிபாட்டுக்குரிய விஷேட சின்னம் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி உள்ளடங்களாக வெள்ளை ஆடை அணிந்த வண்ணமாக சிரேஸ்ட அதிகாரிகள் குழுவினர் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது ஔியூட்டப்பட்ட எண்கோண வடிவிலான பிரித் மண்டபம் அமைக்கப்பட்ட பகுதிக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா வருகை தந்ததை தொடர்ந்து மகா சங்கத்தினருக்கு (தெஹெத் வட்டிய) வெற்றிலை தட்டு வழங்கி வைக்கப்பட்டதோடு, 72 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இரவு நேரம் முழுவதுமாக ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது தலைமை பிக்குவினால் பிரித் பாராயண நிகழ்வுகளுக்கு பின்னர் இராணுவத்தின் 72 வது ஆண்டுவிழா மற்றும் இராணுவத்தின் அர்ப்பணிப்பு சேவைகளின் முக்கியத்துவம் குறித்து 'அனுஷாசனா' (சொற்பொழிவு) நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து போரில் உயிர் நீத்த வீரர்களின் ஆத்ம சாந்திக்காகவும் காயமடைந்த வீரர்களின் வாழ்விற்குமான ஆசிகளும் வழங்கப்பட்டது. அத்தோடு இராணுவத்தின் கடந்த கால புகழ்மிக்க அம்சங்கள் தொடர்பில் உரையாற்றிய அவர், தேசத்தின் பாதுகாவலர்களாக இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட செயற்பாடுகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளைகளினதும் ஆதரவுடன் “பிங்கம” அன்னதான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இறுதியாக வியாழக்கிழமை (7) ஜய ஸ்ரீ மஹா போதியில் இடம்பெறவுள்ள வழிபாடுகளுக்கு முன்னதாக, இடம்பெற்ற மேற்படி வழிபாடுகளில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் “ஹீல் தான” (பிக்குகளுக்கான காலை நேர உணவு வழங்கல்) நிகழ்வும் இடம்பெற்றது.