07th October 2021 13:24:04 Hours
புத்தளத்திலுள்ள 58 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 17 வது தளபதியாக பிரிகேடியர் ரோஹித அலுவிஹாரே செவ்வாய்க்கிழமை (17) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு முன்பாக மேற்படி நியமனத்தை வகித்த மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படைப்பிரிவு வளாகத்திற்கு வருகை தந்தபோது தளபதிக்கு 9 வது விஜயபா காலாட் படையணி சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, 58 படைப்பிரின் சிரேஸ்ட அதிகாரிகள் அனைவரும் புதிய தளபதிக்கு வரவேற்பளித்தனர். அதனையடுத்து பிக்குகளின் “செத் பிரித்” பாராயணங்களுக்கு மத்தியில் அவர் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.
பின்னர் புதிய தளபதியால் மரக்கன்று ஒன்று நாட்டி வைக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது எதிர்கால பணிகள் தொடர்பில் படையினருக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டனர். பிரிகேடியர் ரோஹித அலுவிஹாரே புதிய நியமனத்தை பெற்றுக்கொள்ளவேதற்கு முன்பாக அம்பாறை பயிற்சி பாடசாலையின் தளபதியாக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.