05th October 2021 15:26:49 Hours
இராணுவத்தின் சமூக நலன் திட்டங்களை விரிவுபடுத்தும் வகையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் ஆலோசணைக்கமைய, வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் திருமதி மோகன்ராஜ் மகேஸ்வரி அவர்களின் குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 25 செப்டம்பர் 2021 அன்று இடம்பெற்றது.
56 வது படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டலில் 562 வது பிரிகேடின் 17 (தொ) இலங்கை சிங்கப் படையணி படையினர் “சேப்டி கிரடிட் ” தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு எம்.மயூரதன் அவர்களின் நிதி உதவியில் ஏழைக் குடும்பமொன்றுக்கான வீடொன்றை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி பெரேரா, இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
சிதம்பரபுரம் தேவாலயத்தின் பாதிரியார், 562 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சேணக பிரேமவன்ச, 17 (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, சமூர்த்தி அதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர் , கிராம உத்தியோகத்தர் ஆகியோரும் மேற்படி அடிக்கல் நாட்டு விழாவில் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கலந்துகொண்டனர்.