Header

Sri Lanka Army

Defender of the Nation

05th October 2021 16:30:12 Hours

ஆண்டு விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு படையினரால் இரத்த தானம்

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 55 வது படைப்பிரிவின் 552 பிரிகேட் சிப்பாய்களால் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் வழிகாட்டலின் கீழ் திங்கள்கிழமை (4) இரத்தானம் வழங்கும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜெனரல் மஹிந்த ஜெயவதேனாவவின் கண்காணிப்பின் கீழ் யக்கச்சியில் அமைந்துள்ள 552 பிரிகேட் தலைமையகத்தில் இரத்தானம் வழக்கப்பட்டது .

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்தப் கொள்ளளவை நிரப்பும் நோக்கில் படையினரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் முடிவில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய பணியாளர்கள் யாழ்ப்பாணத்தில் உயிர்களைக் காப்பாற்ற இராணுவம் அளித்த தாராள மனப்பான்மையுடனான ஆதரவுக்கு பாராட்டு தெரிவித்தனர் .

இதன்போது 55 வது படைப்பிரின் தளபதி , 552 பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்பி முனிபுறா, சிரேஸ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.