05th October 2021 11:53:28 Hours
இலங்கை சிங்கப் படையணியின் 65 ஆவது ஆண்டு நிகழ்வை முன்னிட்டு அம்பேபுஸ்ஸவில் அமைந்துள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் 01 ஒக்டோபர் 2021 அன்று கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
இதன்போது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை சிங்கப்படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களுக்கு நிலையத்தளபதி தம்மிக்க தசநாயக்க அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
அதனையடுத்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அத்தோடு தேசப்பற்று நிறைந்த பாடல்களும் இசைக்கப்பட்டு இலங்கை சிங்கப்படையின் தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான 2 மாடி தங்குமிட விடுதி கட்டிடத்தொகுதி, மற்றும் “சிங்க கபே” கட்டிடம் ஆகியனவும் தளபதியால் திறந்து வைக்கப்பட்டன.
அதனையடுத்து படைத் தளபதியால் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இணைந்து நாட்டினதும், பிராந்தியத்தினதும் அமைதிக்காக உயிர் நீத்த 3929 போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவற்றோடு மாலை நேரத்தில் படையணியில் உள்ள சகலரினதும் குடும்பங்களுக்காக ஆசி வேண்டும் வகையிலும் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அமைதி வேண்டியும் மகா சங்கத்தினரால் இரவு நேரம் முழுவதுமாக சிப்பாய்களுக்கான விருந்தகத்தில் பிரித் பாராயணம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இறுதியாக மகா சங்க உறுப்பினர்களுக்கு (ஹீல் தானய) தானம் வழங்கி வைக்கப்பட்டதோடு (02) காலை விழாக்கள் நிறைவடைந்தன. இந்நிகழ்வில் சிங்கப்படையணியின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்களும் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.