Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2021 15:30:42 Hours

இலங்கை தொண்டர் படைத் தலைமையத்தில் வெளியேறும் தளபதிக்கு பிரியாவிடை

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாகவிருந்த மேஜர் ஜெனரல் சேன வடுகே 35 வருடகால முன்மாதிரியான இராணுவ சேவையை நிறைவு செய்துகொண்டு 2021 ஒக்டோபர் 04 அன்று இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றமையினையிட்டு பிரியாவிடை வழங்கப்பட்டது.

நியமனத்தை கைவிடுவது தொடர்பான நிகழ்வுகளின் நிறைவில் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பயிற்சி பரிசோதகர் பிரிகேடியர் எஸ்.என்.சமரவிக்கிரம அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் சிரேஸ்ட அதிகாரிக்கு இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய தளபதி தனது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட தாராளமான உதவி மற்றும் ஒத்துழைப்பிற்காக அதிகாரிகளுக்கும் சிப்பாய்களுக்கும் நன்றி கூறினார். தொண்டர் படையணிக்கு அவர் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் விதமான நினைவுப் பரிச்சொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு தலைமையகத்திலிருந்து புறப்படுவதைக் குறிக்கும் வகையில், தலைமையக வளாகத்தில் அண்மையில் கட்டப்பட்ட 'கஜனிந்து அரண' தொகுதியை திறந்து வைத்தார்.

பிரதான நுழைவாயில் வரையில் வரிசைக்கிரமமாக அணிவகுத்து நின்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் நல்வாழ்த்துக்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் சேன வடுகே வெளியேறியதை தொடர்ந்து நிகழ்வுகள் நிறைவை எட்டின. இந்நிகழ்வுகள் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.