Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2021 11:17:42 Hours

கந்தளாய் - எல்ல பகுதியில் பொதுச் சேவை படையினரால் நெற் களஞ்சியம் உருவாக்கம்

இராணுவத்தினரால் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல்லை சேமித்து வைக்கும் நோக்கத்துடன் கந்தளாய் - எல்ல பகுதியில் இலங்கை இராணுவ பொதுச் சேவை படையினரால் 100,000 கிலோவிற்கும் அதிகமான நெல்லை சேமிக்ககூடிய வகையிலான 2000 சதுர அடி பரப்பளவில் புதிய நெல் உளர்த்தும் களஞ்சியசாலையொன்று நிறுவப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் “சௌபாக்கி நோக்கம்” கொள்கைத் திட்டத்துடன் இணைந்தாக இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைவான “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் மேற்படி நடவடிக்டிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டமானது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் படைத் தளபதி பிரிகேடியர் எச்ஏபீபீகே ஹேவாவசம் அவர்களின் அறிவுரையின் பேரில் முதலாவது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் கட்டளை அதிகாரி சீஎஸ் தெமுனி அவர்களால் செப்டம்பர் (26) திறந்து வைக்கப்ட்டது.

கந்தளாய் – எல்ல முகாம் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூஆர்ஏசி பிரசன்ன அவரது படையினரின் பங்களிப்புடன் மேற்படி களஞ்சியத்தை கட்டமைத்தார்.