Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2021 15:25:25 Hours

ஓய்வுபெறும் வன்னி தளபதிக்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கௌரவிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு 2021 ஒக்டோபர் 02 தனது நியமனத்தை கைவிட்டார்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது தளபதியாக மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்கள் நியமனம் வகித்திருந்ததோடு, தற்போது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தொற்று நோய்பரவலை கருத்திற் கொண்டு சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக சிறிய அளவில் ஏற்பாடு செய்யபட்டிருந்த மேற்படி நிகழ்வுகளின் போது, ஓய்வுபெறும் தளபதிக்கு பாதுகாவர் அறிக்கையிடல் மரியாதையோடு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இதன்போது படைப்பிரிவு தளபதிகளும், (வடமத்திய) முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளின் தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய தளபதி தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.