Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2021 15:33:55 Hours

இந்திய இராணுவத்தின் மிகப் பெரிய விளையாட்டு குழு இலங்கை வருகை

(ஊடக அறிக்கை)

இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகிய இரு தரப்பினர் மத்தியிலும் விளையாட்டு ஆர்வம் , இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு “இராணுவ விளையாட்டு பரிமாற்றம்” திட்டத்தின் கீழ் அடுத்த வாரம் இலங்கைக்கு வரவிருக்கும் 61 பேர் அடங்கிய இந்திய இராணுவ குழாம் நட்பு ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

2021 ஆம் ஆண்டில் தொற்றுநோய் அச்சுறுத்தலால் பின்னடைவுகள் காணப்பட்டாலும் , விளையாட்டு பரிமாற்று நிகழ்வு மற்றும் விளையாட்டு துறைக்கு ஊக்குவிப்பை வழங்க வேண்டும் என்ற பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய தேசிய மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு தரத்தில் அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூர் போட்டிய நிகழ்வாக மேற்படி நிகழ்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த காலங்களில் இந்திய இராணுவத்தினருடன் கரப்பந்து, கபடி, கூடைப்பந்து, ஹொக்கி போன்ற பல நட்பு போட்டிகளில் இலங்கை இராணுவம் பங்கேற்றிருந்தாலும், 2 அதிகாரிகள் மற்றும் 59 விளையாட்டு வீரர்கள் (61) பேர் அடங்கிய பெரும் குழுவாக ஒருபோதும் பங்குபற்றியிருக்கவில்லை. இந்நிகழ்வுகள் தேசிய விளையாட்டுக்குழுவின் தலைவரான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய இராணுவ விளையாடடு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் நளின் பண்டாரநாயக்க அவர்களினால் இந்நிகழ்வு ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இரு நாட்டு படைகளினதும் விளையாட்டு வீரர்கள் ஹொக்கி (கொழும்பில் செயற்கை மைதானம்), பனாகொட இராணுவ விளையாட்டு கிராமத்தில் கூடைப்பந்து மற்றும் கரப்பந்து ஆகிய போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர். அதனையடுத்து விருது வழங்கும் நிகழ்வுகளுக்கு முன்பதாக தொம்பேகொடை இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணி தலைமையக கிரிகட் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் பங்குகொள்ளவுள்ளனர்.

வருகை தரும் இந்திய குழுவினர் சனிக்கிழமை (16) இலங்கையிலிருந்து புறப்படும் முன்னதாக காலி, பின்னவல, கண்டி மற்றும் சிகிரியா ஆகிய இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். (முடிவு)