Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2021 16:30:18 Hours

பரிசளிக்கப்பட்ட ஒக்சிஸிமீட்டர்கள் பகிர்ந்தளிப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவினரால் இராணுவ தளபதிக்கு பரிசாக கிடைக்கப்பெற்றிருந்த ஒக்சிமீட்டர்கள் அத்துருகிரிய, முல்லேரியா மற்றும் கடுவலை பகுதிகளில் உள்ள வறிய குடும்பங்களுக்கு அண்மையில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ ஆலோசணைகளுக்கு அமைவாக மேற்படி பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கு இரத்ததின் ஒக்ஸிஜன் செறிவை அளவிடுவதற்காக மேற்படி உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற பெரும் தொகை ஒக்சிமீட்டர்கள் தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாப்பா அவர்களின் வழிகாட்டலின் கீழ் 14 வது படைப்பிரிவு தளபதியினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.