06th October 2021 21:00:23 Hours
இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இன்று (5) பிற்பகல் பத்தமுல்லை 'ரணவிரு ஸ்மராயகயா' நினைவுச் சதுக்கத்தில் தியாக வீரர்கள் மரியாதையுடன் நினைவுகூறப்பட்டனர். ஒக்டோபர் 10 இராணுவ தினத்தையொட்டி இவ்வகையான நினைவுக்கூறல் வருடாந்தம் இடம்பெறுவதோடு, இவ்வாண்டுக்கான நிகழ்வின் பிரமத அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்தி சில்வா கலந்துகொண்டார்.
இந்நிகழ்வு இராணுவ ஆண்டு நிறைவு விழா தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, பயங்கரவாதத்தை 12 வருடங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு தங்களது பெறுமதியான உயிர்களை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் நிகழ்வாக இடம்பெறுகிறது.
நிகழ்வின் அடுத்தகட்டமாக தளபதியின் வருகையை தொடர்ந்து தாய் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு, இராணுவ கீதமும் இசைக்கப்பட்டது. பின்னர் தேசத்திற்காக உயிர்நீத்த வீரர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நேர்த்தியாக விழாக்களுக்கான சீருடையை அணிந்த சிப்பாய்களால் இலங்கை இராணுவம் விடுதலை புலிகள் அமைப்புடனான கொடூரமான மூன்று தசாப்த கால யுத்தத்தை எவ்வாறு நிறைவிற்கு கொண்டு வந்தது என்பது அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பிரதம விருந்தினரால் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து இராணுவ தளபதியினால் மற்றையவர்களின் நலனுக்காக தங்களது விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் நினைவு தூபிற்கு மலர் அஞசலி செலுத்தினார். அந்த தருனம் துயரமாகவும் வலி மற்றும் இழப்பு என்பவற்றை நினைவுபடுத்திய மிகச் சோகமான தருணமாக அமைந்திருந்தது. ஆனால் வீரர்கள் உயிரிழந்திருந்தாலும் அவர்களின் நினைவுகளை கம்பீரமாக சுமந்த வண்ணம் நினைவு தூபி எழுந்து நிற்பது குறிப்பிடத்தக்கதாகும். இராணுவ தளபதியால் நினைவுச் சின்னத்திற்கு மலர் அஞசலி செலுத்தப்பட்டதன் பின்னர் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகார ஆணையற்ற அதிகாரிகள், சிரேஸ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோரால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது இறுதி அமச்மாக வீரர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான விளக்க உரை வாசிக்கப்பட்டதுடன், “ரிவெயிலி” இசைக்கப்பட்டது. இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மேற்படி நிகழ்வு முன்னுரிமை அடிப்படையில் வருடாந்தம் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.
இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகளும் தங்களது மரியாதையை செலுத்தினர். இந்நிகழ்வுகள் யாவும் கொவிட் – 19 சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.