Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2021 16:02:18 Hours

இராணுவ தலைமையகத்தின் புதிய வழங்கல் பணிப்பாளர் நாயகம் அலுவலக கடமைகளை பொறுப்பேற்றார்

இராணுவ தலைமையகத்தின் 29 வது புதிய வழங்கல் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் பிரியந்த கமகே வெள்ளிக்கிழமை (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிதாக நியமனம் பெற்ற வழங்கல் பணிப்பாளர் நாயகம் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.

மேற்படி நியமனத்தை வகித்த மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அண்மையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக நியமனம் பெற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே புதிய தளபதியாக இவர் நியமனம் பெற்றுக் கொண்டுள்ளார்.

பணிப்பகத்தின் அதிகாரிகள் உள்ளடங்களாக சிரேஸ்ட அதிகாரிகள், வழங்கல் பணிப்பகத்தின் கீழுள்ள பிரிவுகளின் அதிகாரிகள், அலுவலகத்தின் பொதுப்பணி அதிகாரிகள், சிப்பாய்களும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன் புதிதாக நியமனம் பெற்ற தளபதி மேற்படி நியமனத்திற்கு முன்பாக இராணுவ அதிகாரிகள் தொழிலாண்மை மேம்பாட்டு கல்லூரியின் பதவி நிலை பிரதானியாக நியமனம் வகித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.