01st October 2021 18:37:08 Hours
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில 571 வது பிரிகேட் தலைமையக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் அல்லது மனித செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகளை எதிர்கொள்வது தொடர்பிலான மாநாடு திங்கட்கிழமை (27)நடைபெற்றது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் திரு.கோகுல்ராஜ், கிளிநொச்சி நீர்பாசன திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் திரு ராஜகோபு, கிளிநொச்சி கிழக்கு நீர்பாசன பொறியியலாளர் திரு செந்தில்குமரன், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிர்வாக அதிகாரி திரு எஸ்.சந்திரன், விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் திரு. தேவரதன், 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
மேலும் பாதகமான வானிலை நிலைமைகள் ஏற்படும் போது, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையங்களில் உள்ளவர்கள் உரிய பகுதிகளிலுள்ள படையினருடன் இணைந்து அனர்த்தங்களை தணிக்கும் பணிகளில் ஈடுபடுவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.