Header

Sri Lanka Army

Defender of the Nation

01st October 2021 14:15:54 Hours

இராணுவ தளபதிக்கு கிடைக்கப்பெற்ற ஒக்சிமீட்டர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு பகிர்ந்தளிப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 14 வது படைப்பிரிவினரால் இராணுவ தளபதிக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற ஒக்சிமீட்டர்கள் 2021 செப்டம்பர் 29 அன்று அதுருகிரிய, கோட்டே மற்றும் அங்கொட பகுதிகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதற்கமைய ஒட்சிசன் அளவு மற்றும் செறிவினை அளவிடக்கூடிய மேற்படி கருவிகள் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்திய ஆலோசணையின் பேரில் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்ங்களை சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒக்சிமீட்டர்கள் மிகவும் தேவையுள்ளவர்களுக்காக விநியோகிக்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவரகளினால் 14 வது படைப்பிரிவு தளபதிக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய மேற்படி விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.