Header

Sri Lanka Army

Defender of the Nation

01st October 2021 15:30:29 Hours

தியதலாவையில் புதிய நலன்புரி விற்பனை நிலையம் திறப்பு

தியதலாவை பகுதியில் இராணும் மற்றும் பொது மக்களுக்கான உணவு பொருட்கள், சுகதார அம்சங்கள் மற்றும் ஏனைய பொருட்களின் விநியோகத்திற்கு காணப்படும் அவசியத்தை கருத்தில் கொண்டு மேற்படி பகுதியில் பழைய கட்டிடம் ஒன்றில் 17 வது பொறியியல் சேவை படையினரால் “சென்றல் சுப்பர்” என்னும் பெயரில் புதிய நலன்புரி விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி திறப்பு விழா மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் புதன்கிழமை (29) புதிய நலன்புரி நிலையத்தில் அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

திறப்பு விழா நிகழ்வில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகளும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.