Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2021 17:39:10 Hours

இராணுவ ஆண்டு பூர்த்திவிழா நிகழ்வை முன்னிட்டு மயூராபதி அம்மன் கோவிலில் 'அபிஷேக' பூஜை

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டுவிழா மற்றும் இராணுவ தினத்தை (அக்டோபர் 10) முன்னிட்டு இந்து மத பாரம்பரியத்திற்கமைவான அபிஷேக பூஜைகள் கொழும்பு 6 இல் அமைந்துள்ள மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று பிற்பகல் (1) இடம்பெற்றன.

இலங்கை இராணுவ இந்து மத சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அபிஷேக’ பூஜை நிகழ்வுகளின் போது ஆலயத்தின் கருவறைக்குள் கொண்டுச் செல்லப்பட்டு இராணுவ கொடிக்கு ஆசிர்வாத பூஜை நிகழ்த்தப்பட்டது. இராணுவ இந்து சங்கத்தின் அழைப்பின் பேரில் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, ஆலய மணிகளின் ஒலிக்கு மத்தியில் பூசகர்களால் இராணுவ கொடிக்கு ஆசி வழங்கப்பட்டது.

ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ உதய ராகவ குருக்கள் தலைமையில் 10 பேர் அடங்கிய அந்தணர் குழுவினரால் 72 ஆவது ஆண்டு விழாவிற்கு கௌரவம் செய்யும் வகையில் கடவுளுக்கு பழங்கள், நெய் மற்றும் மாலைகளுடன் அர்ச்சணை நிகழ்த்தபட்டது. அதனையடுத்து இந்து மத தெய்வங்களுக்கு தண்ணீர் மற்றும் நறுமண பொருட்களை அபிஷேகம் செய்தமையை காணக்கிடைத்தமையும் அரிதான அம்சமாகும்.

இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் வழிபாடுகளின் நிறைவம்சமாக இராணுவத்தின் சகல உறுப்பினர்கள் சார்பிலும் ஆலயத்தின் மேம்பாட்டுக்கான நன்கொடையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ உதய ராகவ குருக்கள் அவர்களினால் மேற்படி நிகழ்வுகள் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டிருந்தமையும் சிறப்பம்சமாகும்.

இராணுவ இந்து சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் லால் விஜேதுங்க, பிரதம விருந்தினருக்கு வரவேற்பளித்ததோடு சிரேஸ்ட அதிகாரிகள் பலரது பங்கேற்புடன். உரிய சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்து வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் பல மத சடங்குகள் (27) செப்டம்பரில் கண்டி புனித தலதா மாளிகையில் கிலன்பச வழங்குதல், பிரித் பாராயணம் மற்றும் அனைத்து இராணுவக் கொடிகளிளுக்கும் ஆசி வழங்குதல் ஆகியவற்றுடன் ஆரம்பமாகியதுடன், இஸ்லாமிய பிரார்த்தனைகள் மற்றும் கொழும்பில் கிறிஸ்தவ மத வழிபாடுகள் வியாழக்கிழமை (30) இடம்பெற்றன.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள், இராணுவ இந்து மதச் சங்க உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் இந்து மதத்தை சார்ந்த மற்றும் சிலரும் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.